பிரின்ஸ் குழுமம் தொடர்பில் ஆடவரிடம் விசாரணை: காவல்துறை

பிரின்ஸ் குழுமம் தொடர்பில் ஆடவரிடம் விசாரணை: காவல்துறை

2 mins read
1d3e6927-4f7c-4103-a3fc-2802214c44c1
பணமோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பிரின்ஸ் குழுமத்துடன் தொடர்புடைய $150 மில்லியன் மதிப்புள்ள சொத்துகள் சிங்கப்பூரில் பறிமுதல் செய்யப்பட்டன. - படம்: சிங்கப்பூர்க் காவல்துறை
multi-img1 of 2

சிங்கப்பூர்க் காவல்துறை, பணமோசடி தொடர்பில் ஆடவர் இருவரை விசாரிப்பதாகத் தெரிவித்துள்ளது. அவர்கள், தடைகளை எதிர்கொள்ளும் கம்போடியாவின் பிரின்ஸ் குழுமத்துடன் தொடர்புடையவர்கள் என்று நம்பப்படுகிறது.

சீன நாட்டவரான 44 வயது ஹூ சியாவ்வெய், 38 வயது சியூ வெய் ரென் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் காவல்துறை செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) தெரிவித்தது.

அமெரிக்காவின் வெளிநாட்டுச் சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகம் வெளியிட்ட தடைசெய்யப்பட்டோருக்கான பட்டியலில் சியூவின் பெயர் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்கச் சட்ட அமலாக்க அமைப்புகள் போன்ற அனைத்துலக அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டபோது சியூ அடையாளம் காணப்பட்டதாகக் காவல்துறை குறிப்பிட்டது.

ஹூ என்ற மற்றோர் ஆடவர் சைபிரஸ், செயின்ட் கிட்ஸ், நெவிஸ், ஹாங்காங் ஆகிய நாடுகளின் கடப்பிதழ்களை வைத்திருந்ததாக அதிகாரிகள் கூறினர்.

சிங்கப்பூரில் உள்ள வங்கிக் கணக்குகளில் ஹூ வைத்திருந்த சொத்துகளைக் காவல்துறை இவ்வாண்டு ஜனவரி மாதம் கைப்பற்றியது.

“கடந்த ஆண்டு அக்டோபரில் காவல்துறையின் சோதனை நடவடிக்கைகள் தொடங்குவதற்குமுன் ஹூ சியாவ்வெய்யும் சியூ வெய் ரென்னும் சிங்கப்பூரைவிட்டு புறப்பட்டனர்,” என்ற காவல்துறை தெரிவித்தது.

இவ்வாண்டு மார்ச் மாதம் தொடங்கி, சம்பந்தப்பட்ட ஆடவர் தொடர்பில் $600 மில்லியனுக்கும் அதிகமான ரொக்கம், சொத்துகள், மூன்று வீடுகள், ஓர் உல்லாசப் படகு, விலையுயர்ந்த கார்கள், பைகள், கைக்கடிகாரங்கள் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

பிரின்ஸ் குழுமம் தொடர்பில் சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின்போது அவை அனைத்தும் சிக்கின.

அமெரிக்காவின் வெளிநாட்டுச் சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகம் வெளியிட்ட தடைகளுக்கான ஆக அண்மைப் பட்டியலில் ஹூவுடன் தொடர்புடைய குடும்ப அலுவலகம் குறிப்பிடப்பட்டிருந்தது. அது, சிங்கப்பூரை அடிப்படையாகக் கொண்ட அலுவலகம் என்று கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், அமெரிக்க நிதியமைச்சின்கீழ் உள்ள வெளிநாட்டுச் சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகம், பிரின்ஸ் குழுமத்தின் மீதும் கம்போடியாவைச் சேர்ந்த சென் சி மீதும் தடைகளை விதித்தது.

குறிப்புச் சொற்கள்
பணமோசடிதடைஅமெரிக்காசிங்கப்பூர்சோதனைகம்போடியா