எதிர்க்கட்சித் தலைவரும் பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளருமான பிரித்தம் சிங்கின் மேல்முறையீட்டு மனு வியாழக்கிழமை (டிசம்பர் 4) நிராகரிக்கப்பட்டது.
2021ஆம் ஆண்டு டிசம்பர் 10 மற்றும் 15ஆம் தேதிகளில் நாடாளுமன்ற சிறப்புக் குழுவிடம் பொய்யுரைத்ததாகத் திரு சிங் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் விதிக்கப்பட்டிருந்தன.
13 நாள்கள் வழக்கு விசாரணைக்குப் பிறகு, அவருக்கு பிப்ரவரி 17ஆம் தேதியன்று $14,000 அபராதம் விதிக்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வகிக்கும் ஒருவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டிருப்பது கடந்த கிட்டத்தட்ட 40 ஆண்டுகளில் இதுவே முதல்முறை.

