நவம்பர் 4ஆம் தேதி பிரித்தம் சிங்கின் மேல்முறையீடு விசாரிக்கப்படும்

1 mins read
நாடாளுமன்றச் சிறப்புரிமைக் குழுவிடம் பொய்யுரைத்தது தொடர்பான வழக்கு
4814dcb7-fe38-4e9a-9983-e28c62f4ff81
பாட்டாளிக் கட்சித் தலைவர் பிரித்தம் சிங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பாட்டாளிக் கட்சித் தலைவர் பிரித்தம் சிங்கின் மேல்முறையீடு, நவம்பர் 4ஆம் தேதி காலை 10 மணிக்கு விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விக்குப் பதிலளித்த திரு சிங்கின் வழக்கறிஞர் ஆண்ட்ரே ஜுமாபோய், புதன்கிழமை (ஜூலை 9) இதனைத் தெரிவித்தார்.

நாடாளுமன்றச் சிறப்புரிமைக் குழுவிடம் பொய்யுரைத்தது தொடர்பில் திரு சிங் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. விசாரணைக்குப் பிறகு அவர் குற்றவாளி என்று கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட 40 ஆண்டுகளில், குற்றவியல் வழக்கில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது அதுவே முதன்முறை.

பிப்ரவரி 17ஆம் தேதி, அவருக்கு மொத்தம் $14,000 அபராதம் விதிக்கப்பட்டது. ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் அதிகபட்ச அபராதத் தொகையான $7,000ஐச் செலுத்த அவருக்கு உத்தரவிடப்பட்டது.

அந்தத் தீர்ப்பையும் தண்டனையையும் எதிர்த்து மேல்முறையீடு செய்யவிருப்பதாகத் திரு சிங் கூறியிருந்தார்.

முன்னதாக, 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி, பாட்டாளிக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கான் நாடாளுமன்றத்தில் பொய்யுரைத்த விவகாரத்தைக் கையாண்ட விதம் தொடர்பில் திரு சிங் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

குறிப்புச் சொற்கள்