16 சிறுமியருக்குப் பாலியல் தொல்லை தந்த தனியார் கல்வி ஆசிரியர்

16 சிறுமியருக்குப் பாலியல் தொல்லை தந்த தனியார் கல்வி ஆசிரியர்

கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

27 Nov 2026 - 9:27 pm

1 mins read

பகுதிநேரத் தனியார் கல்வி ஆசிரியர் ஒருவர், கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக ஏழு வயதுச் சிறுமிகள் உட்பட 16 சிறுமிகளைத் தமது பாலியல் இச்சைக்கு உள்ளாக்கியுள்ளார்.

அந்தச் சிறுமியரில் எட்டுப் பேரை அவர் மானபங்கம் செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட 16 சிறுமிகளும் அந்தரங்கமாகப் படம்பிடிப்பதற்கோ சிறுவர் பாலியல் படங்கள் தயாரிப்பதற்கோ அல்லது இவை இரண்டுக்குமோ உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர், குடும்ப விழா ஒன்றில் அவரால் குறிவைக்கப்பட்ட அவரது உறவினரின் மகள் ஆவார். மற்றவர்கள் அவரிடம் கல்வி பயின்ற மாணவிகள்.

2022 டிசம்பர் முதல் 2025 செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் அவர் இக்குற்றங்களைப் புரிந்துள்ளார். பெரும்பாலான தனியார் கல்வி வகுப்புகள் மற்றவர்களின் பார்வையில் படாதவாறு தனிமையில் நடத்தப்பட்டதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் டான் ஜுன் யா தெரிவித்தார்.

12 வயது மகள் மற்றும் 17 வயது மகனுக்குத் தந்தையான, 48 வயதான அந்த முன்னாள் பள்ளி ஆசிரியர் வெள்ளிக்கிழமை (நவம்பர் 27) தம் மீதான 21 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

அவற்றில் மானபங்கம் செய்தல் தொடர்பான 11 குற்றச்சாட்டுகளும் சிறுவர் பாலியல் படங்களைத் தயாரித்த ஏழு குற்றச்சாட்டுகளும் அந்தரங்கமாகப் படம்பிடித்த மூன்று குற்றச்சாட்டுகளும் அடங்கும்.

2027 பிப்ரவரியில் அவருக்குத் தண்டனை விதிக்கப்படும்போது மேலும் 51 குற்றச்சாட்டுகள் கவனத்தில் கொள்ளப்படும்.

பாதிக்கப்பட்ட சிறுமிகளின் அடையாளத்தைப் பாதுகாக்கும் நீதிமன்றத் தடை உத்தரவு காரணமாக குற்றவாளியின் பெயரை வெளியிட முடியாது.

குறிப்புச் சொற்கள்