உங்கள் இணையத்தளக் கணக்குகளைப் பாதுகாத்திடுங்கள்: உங்கள் அடையாள அட்டை எண்ணைக் கடவுச்சொல்லாகப் பயன்படுத்தாதீர்கள்

2 mins read
தங்கள் அடையாள அட்டை எண்ணை, கடவுச்சொல்லாகப் பயன்படுத்துவது வசதியாக இருக்கும் என்று சிலர் நினைக்கலாம். இருப்பினும், உங்கள் அடையாள அட்டை எண் மற்றவர்களுக்குத் தெரிய வாய்ப்புள்ளதால், இது பாதுகாப்பானது அல்ல.
383ab05f-4314-44f8-9993-69585b73da6c
இணையத்தளக் கணக்குகளைப் பாதுகாக்க, வலுவான கடவுச்சொல்லைப் பயன்படுத்துங்கள். - படம்: ஜெட்டி இமேஜஸ்

நாம் அனைவரும் நமது அடையாள அட்டை எண்ணை மனப்பாடம் செய்திருப்போம். அது நினைவில் வைத்துக்கொள்ள எளிதாக இருப்பதால், அதை நமது கடவுச்சொல்லாகப் பயன்படுத்த விரும்புவோம். ஆனால், அப்படிச் செய்வது உண்மையிலேயே பாதுகாப்பானதா? மற்றும், நமது இணையத்தளக் கணக்குகளையும் தகவல்களையும் நாம் எவ்வாறு பாதுகாக்கலாம்?

இந்தக் காணொளியைக் கண்டு தெரிந்துகொள்ளுங்கள்!

இந்த 4 அத்தியாவசிய குறிப்புகளை நினைவில் கொள்ளுங்கள்

1. உங்கள் அடையாள அட்டை எண், உங்களைப் பிறரிடமிருந்து வேறுபடுத்துகிறது.

-

வங்கி, மருந்தகம், மருத்துவமனை ஆகிய இடங்களிலும், புதிய திறன்பேசி இணைப்புக்கு விண்ணப்பிக்கும்போதும் உங்களைப் பிறரிடமிருந்து துல்லியமாக வேறுபடுத்துவதற்காகவே, உங்கள் அடையாள அட்டை எண் பயன்படுத்தப்படுகிறது.

2. உங்கள் அடையாள அட்டை எண்ணைக் கடவுச்சொல்லாகப் பயன்படுத்தக்கூடாது.  ஏனெனில், அது மற்றவர்களுக்கும் தெரிந்திருக்கலாம்.

-

சில சூழ்நிலைகளில், நீங்கள் உங்களது அடையாள அட்டை எண்ணைப் பகிர வேண்டியுள்ளதால், அது மற்றவர்களுக்குத் தெரிவதற்கான வாய்ப்புள்ளது. எனவே, உங்கள் இணையத்தளக் கணக்குகளுக்கு உங்கள் அடையாள அட்டை எண்ணைக், கடவுச்சொல்லாகப் பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல.

3. உங்கள் இணையத்தளக் கணக்குகளைப் பாதுகாக்க, வலுவான  கடவுச்சொல்லைப் பயன்படுத்துங்கள்.

-

தனித்துவமான ஒரு சொற்றொடர், பேரெழுத்துகள், சிற்றெழுத்துகள், எண்கள், சிறப்புக் குறிகள் ஆகியவற்றைக் கொண்டு கடவுச்சொல்லை உருவாக்குங்கள். ஆனால், அந்த கடவுச்சொல்லை நீங்கள் எளிதாக நினைவில் வைத்திருந்தாலும், அது மற்றவர்களுக்கு  ஊகித்து அறிவதற்கு கடினமாக இருக்கவேண்டும்.

4. ஒவ்வொரு கணக்கிற்கும் வெவ்வேறு கடவுச்சொற்களைப் பயன்படுத்துங்கள்.

-

ஒவ்வொரு கணக்கிற்கும் தனித்துவமான கடவுச்சொற்களைப் பயன்படுத்துவதனால் மட்டுமே உங்கள் இணையப் பாதுகாப்பை வலுப்படுத்தலாம்.

உங்கள் இணையப் பாதுகாப்பை வலுப்படுத்துதல்

மின்-ஆவணங்களுக்கும் இணையத்தளக் கணக்குகளுக்கும் அடையாள அட்டை எண்களை இயல்புநிலைக் கடவுச்சொற்களாகப் பயன்படுத்துவதைத் தடுக்க, அரசாங்கம் அமைப்புகளோடு சேர்ந்து முயற்சி எடுத்து வருகிறது.

இந்தத் தகவலை உங்களுக்காக வழங்குவோர்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு
குறிப்புச் சொற்கள்