அரசாங்கச் சேவையிலிருந்து சான் யெங் கிட் ஓய்வு

1 mins read
537e1e94-aff7-412a-a6c3-b077961ccecb
சான் யெங் கிட், 59. - படம்: பொதுச் சேவைத் துறை

சுகாதார அமைச்சின் முன்னாள் நிரந்தரச் செயலாளர் சான் யெங் கிட், 59, அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் அரசாங்கச் சேவையில் இருந்து ஓய்வுபெறுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதேநேரம், எஸ்பிஎச் மீடியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக அவர் நீடிப்பார்.

தனியார் துறையிலும் பொதுத் துறையிலும் தொழிலாளர் இயக்கத்திலும் விரிவான அனுபவம் பெற்ற திரு சான், இவ்வாண்டு ஜூலை 15ஆம் தேதி எஸ்பிஎச் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை சுகாதார அமைச்சின் நிரந்தரச் செயலாளர் பொறுப்பில் இருந்தபோது கொவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை வழிநடத்த பேருதவி புரிந்தார்.

‘ஹெல்தியர் எஸ்ஜி’ போன்ற திட்டங்களிலும் அவர் முக்கியப் பங்கு வகித்தார்.

1989ஆம் ஆண்டு அரசாங்கச் சேவையில் பணியைத் தொடங்கிய திரு சான், இதற்கு முன்னர் இருந்த சிங்கப்பூர் தகவல் தொடர்பு மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, முன்னாள் தகவல், தொடர்பு மற்றும் கலைகள் அமைச்சின் நிரந்தரச் செயலாளர், தற்காப்பு அமைச்சின் நிரந்தரச் செயலாளர் போன்ற முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றினார்.

கடந்த 2022ஆம் ஆண்டு அவருக்குப் பாராட்டுப் பணிப் பதக்கம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்