‘ஒபியு’ இயந்திரங்கள் வழங்கும் நிகழ்நேர போக்குவரத்து முன்னறிவிப்பு

‘ஒபியு’ இயந்திரங்கள் வழங்கும் நிகழ்நேர போக்குவரத்து முன்னறிவிப்பு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

27 Nov 2025 - 11:07 am

1 mins read

வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஒபியு (OBU) இயந்திரங்கள் புதன்கிழமை (நவம்பர் 26) முதல் நிகழ்நேர போக்குவரத்து நிலவரங்களையும் ஓட்டுநர்களுக்கு வழங்கும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் அதன் ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.

போக்குவரத்து நெரிசல் விவரங்கள், விபத்துகள், வாகனங்கள் பழுதடைதல், சாலைகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுதல், சுத்தம் செய்யப்படுதல் ஆகியவற்றை நிகழ்நேரத்தில் அவை வாகன ஓட்டுநர்களுக்கு அறிவிக்கும்.

இந்த அறிவிப்புகள் பெருவிரைவுச் சாலைகள், துணைச் சாலைகள் ஆகியவற்றையும் உள்ளடக்கும். எதிர்வரும் மாதங்களில் மேலும் பல சாலைகளை படிப்படியாக உள்ளடக்க திட்டம் உள்ளது என ஆணையம் தெரிவித்தது.

சாலைப் பயன்பாட்டுக்கான கட்டணங்களை மட்டும் அவை செலுத்தப் பயன்படுவதோடு பல சேவைகளையும் வழங்கும் திறனை ஒபியு இயந்திரங்கள் பெற்றுள்ளன என்பது இதன்வழி உறுதியாகியுள்ளது.

அடுத்த தலைமுறைக்கான ‘இஆர்பி 2.0’ திட்டத்தின் அங்கமான ‘ஓபியு’ சாதனம் செயலாக்கம், அலை வாங்கி, தொடுதிரை ஆகிய மூன்று பாகங்களைக் கொண்டது.

குறிப்புச் சொற்கள்
வாகனம்நிலப் போக்குவரத்து ஆணையம்சாலைக் கட்டணம்சேவைபொதுப் போக்குவரத்து