எம்ஆர்டி ரயில் சேவைகள் மீதான நம்பகத்தன்மை அக்டோபரில் அதிகரிப்பு

2 mins read
c31a2542-35c8-4482-a57b-da490aebca0c
அக்டோபர் மாதத்தில் ரயில் கட்டமைப்பு மீதான நம்பகத்தன்மை சற்று மேம்பட்டுள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் வழித் தடத்தில் 90 விழுக்காட்டுக்கு மேல் நேரம் தவறாமல் சேவை வழங்கப்பட்டுள்ளதை புதிய புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

இருந்தாலும் அக்டோபரில் நேரம் தவறாத சேவையில் சற்று சரிவு ஏற்பட்டது. செப்டம்பர் மாதத்தின் 99.36 விழுக்காட்டுடன் ஒப்பிடுகையில் அக்டோபரில் நேரம் தவறாத சேவை 98.75 விழுக்காடாக இருந்தது.

ஒட்டுமொத்தமாக, நேரம் தவறாமையில் எம்ஆர்டி ரயில் சேவை மீதான நம்பகத்தன்மை சற்றுக் கூடியுள்ளது.

தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதையில் நேரம் தவறாமல் சேவை வழங்கப்பட்ட தரவுகளை முதல் முறையாக டிசம்பர் 12ஆம் தேதி நிலப் போக்குவரத்து ஆணையம் பகிர்ந்து கொண்டது.

அதன்படி அக்டோபரில் இரண்டு நிமிடத்திற்குள்ளாக குறிப்பிட்ட நேரத்தில் 98.75 விழுக்காட்டு சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. செப்டம்பரில் இது 99.36 விழுக்காடாகும்.

அக்டோபர் மாதத்தில் தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதை ரயில்கள் குறிப்பிட்ட கிலோமீட்டட் தூரத்தை 98.21 விழுக்காடு பயணித்துள்ளதை புதிதாக வெளியிடப்பட்ட தரவுகள் காட்டின. இது, செப்டம்பர் மாதத்தின் 98.88 விழுக்காட்டைவிட சற்றுக் குறைவு

கடந்த 12 மாதங்களில் 30 நிமிடங்களுக்கு மேல் நீடித்த மூன்று பெரிய சேவைத் தடைகளையும் தரவுகள் சுட்டிக்காட்டியிருந்தன. இது, இந்தப் பாதையில் பயணம் செய்த 4.4 விழுக்காடு பயணிகளைப் பாதித்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. மார்ச் 12, ஜூலை 1 மற்றும் செப்டம்பர் 17 ஆகிய தேதிகளில் ரயில் சேவைகளில் தடங்கல் ஏற்பட்டது.

இதற்கிடையே, சிங்கப்பூர் ரயில்வே கட்டமைப்பு மீதான ஒட்டுமொத்த நம்பகத்தன்மை அக்டோபரில் சற்று மேம்பட்டுள்ளது என்று நிலப் போக்குவரத்து ஆணையம் குறிப்பிட்டது.

இதற்கு முன்பு தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் நம்பகத்தன்மை குறைந்திருந்தது.

குறிப்புச் சொற்கள்