தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வீட்டில் சேதமடைந்த பொருள்களை பழுதுபார்க்க ‘ரிப்பேர் கிளினிக்’

2 mins read
ff8e64ef-9244-4d4b-9f90-df9d53044745
பழுதடைந்த பொருள்களை சரிசெய்வது எப்படி என்பதை பொதுமக்கள் இலவசமாகக் கற்றுக்கொள்ளலாம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வீட்டில் சேதமடைந்த பொருள்களை பழுதுபார்க்க பொதுமக்களுக்குக் கற்றுத்தரும் ‘ரிப்பேர் கிளினிக்’ என்னும் பழுதுபார்ப்புக் கற்றல் கூடம் தெம்பனிஸ் பேருந்து நிலையத்தில் வரும் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 27) செயல்படத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

சமூக ஆதரவுடன் பத்தாண்டு காலமாகச் செயல்டும் ‘ரிப்பேர் கோப்பித்தியாம்’ அமைப்பும் எஸ்பிஎஸ் டிரான்சிட்டும் இணைந்து இதற்கு ஏற்பாடு செய்துள்ளன.

புதிய பழுதுபார்ப்புக் கற்றல் கூடம் செயல்பட இருப்பது பற்றி எஸ்பிஎஸ் டிரான்சிட்டின் குழும தலைமை நிர்வாகி ஜெஃப்ரி சிம் சனிக்கிழமை (அக்டோபர் 26) செய்தியாளர்களிடம் பேசினர்.

“தெம்பனிஸ் எம்ஆர்டி அருகில், மக்கள் நடமாட்டம் மிகுந்த பேருந்து நிலையத்தில் இந்தக் கற்றல் கூடம் அமைவது பொருத்தமாக இருக்கும்.

“அதிகமான மக்கள் நேரில் வந்து, பழுதடைந்த பொருள்களைச் சரிசெய்வது எப்படி என்று இலவசமாகக் கற்றுக்கொள்ள அவர்களுக்கு இந்தக் கூடம் வசதியாக இருக்கும்.

“பொருள்கள் பழுதுநீக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படுவதன் மூலம் நீடித்த நிலைத்தன்மைக்குரிய வாழ்க்கைமுறை மாற்றம் ஏற்படும்,” என்றார் அவர்.

சிங்கப்பூர் முழுக்க அங் மோ கியோ, சுவா சூ காங், ஜூரோங் ஈஸ்ட் போன்ற 11 இடங்களில் ரிப்பேர் கோப்பித்தியாமின் பழுதுபார்ப்புக் கற்றல் கூடம் உள்ளது.

மேலும், தெம்பனிஸில் தற்போது இரண்டாவது இடத்தில் அது இடம்பெறுகிறது. குறிப்பாக, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பேருந்து நிலையத்தில் முதல்முறை அது அமைக்கப்பட்டு உள்ளது.

இந்தக் கூடங்கள் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை செயல்படும்.

அக்டோபர் 27 கற்றல் அரங்கிற்கான பதிவு நிறைவுபெற்றுவிட்டது. பொதுவாக, குறைந்தபட்சம் ஆறு வெவ்வேறு இடங்களில் 20க்கும் 25க்கும் இடைப்பட்ட கற்றல் அரங்குகள் இருக்கும்.

குறிப்புச் சொற்கள்