காணாமற்போன குமார் ராமசாமி எனும் 57 வயது ஆடவர் குறித்துத் தகவலறிந்தால் தெரிவிக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
அவர் கடைசியாக நவம்பர் 23ஆம் தேதி காலை 10 மணியளவில் புளோக் 329 செம்பவாங் குளோசுக்கு அருகே காணப்பட்டார்.
குமார் ராமசாமி குறித்துத் தகவலறிந்தோர் காவல்துறையின் நேரடித் தொலைபேசி எண்ணான 1800-255-0000 மூலம் தெரிவிக்கலாம். அல்லது www.police.gov.sg/i-Witness என்ற இணையப்பக்கம் வாயிலாகத் தெரிவிக்கலாம்.
இவ்வாறு தெரிவிக்கப்படும் தகவல்கள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்படும் என்று காவல்துறை உறுதியளித்துள்ளது.

