வரும் சனி, ஞாயிறு கிழமைகளில் நடைபெற இருக்கும் ‘ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் சிங்கப்பூர் மாரத்தான்’ நெட்டோட்டப் பந்தயத்தை முன்னிட்டு நகரின் ஒரு பகுதியில் பொதுமக்களின் நடமாட்டம் நிறுத்தப்படும்.
பந்தயம் நடைபெறும் டிசம்பர் 6, 7 ஆகிய இரு நாள்களும் எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தின் 26 பேருந்துச் சேவைகள் பாதிப்புக்கு உள்ளாகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அந்தப் பேருந்துகள் சில பேருந்து நிறுத்தங்களில் நிற்காமல் செல்லும்.
பேஃபிராண்ட் அவென்யூ, பீச் ரோடு, நிக்கல் ஹைவே, ஃபோர்ட் ரோடு, கெப்பல் ரோடு, சிவிக் டிஸ்டிரிக்ட், மத்திய வர்த்தக வட்டாரம், மரினா சென்ட்ரல் ஆகிய பகுதிகளில் உள்ள பேருந்து நிறுத்தங்கள் அவை.
டிசம்பர் 6ஆம் தேதி காலையில் பேருந்துச் சேவை தொடங்கியது முதல் பிற்பகல் 12.30 மணி வரை பேருந்து சேவை எண்கள் 10, 11, 14, 16/16எம், 31, 32, 33, 56, 57, 70, 100, 107, 111, 130, 131, 133, 158, 195, 196, 400 ஆகியன மாற்றுவழிகளில் திருப்பிவிடப்படும்.
டிசம்பர் 7ஆம் தேதி காலையில் பேருந்துச் சேவை தொடங்கியது முதல் பிற்பகல் 2.20 மணி வரை பேருந்து சேவை எண்கள் 10, 11, 14, 16, 30, 31, 32, 33, 56, 57, 70எம், 80, 100, 107M, 111, 121, 130, 131,133, 145, 158, 186, 195, 196, 400 ஆகியன மாற்றுவழிகளில் திருப்பிவிடப்படும்.
சாலை மூடல் காரணமாக பேருந்து சேவை எண் 401 மட்டும், டிசம்பர் 7ஆம் தேதியன்று வழக்கத்தைவிட தாமதமதாக தனது பயணத்தைத் தொடங்கும்.

