பதின்ம வயது சமய ஆசிரியரான இளையர் ஒருவர் தனது வகுப்பில் சேர்ந்த 12 வயது சிறுமியுடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார்.
இவ்வாண்டு தொடக்கத்தில் பள்ளிவாசல் ஒன்றில் நடத்தப்பட்ட சமய வகுப்பு மூலம் அந்த இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
வகுப்புகள் முடிந்த பிறகு அந்த 19 வயது இளையர் சிறுமியுடன் அவ்வப்போது வெளியே சென்றுள்ளார். சிலநாள்கள் நட்பாக அவர்கள் பழகியுள்ளனர்.
இதை அறிந்த சிறுமியின் தாயார் பள்ளிவாசல் நிர்வாகத்திடம் புகார் கொடுத்தார். அதன் பிறகு அந்த இளையர் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.
இருப்பினும் அந்த இளையரும் சிறுமியும் ரகசியமாக அடிக்கடி சந்தித்துள்ளனர். இரண்டு முறை பாலியல் உறவிலும் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவங்கள் இவ்வாண்டு மே மாதம் நடந்தன.
பாலியல் உறவு குறித்து சிறுமி ஜூலை மாதம் தனது தாயிடம் கூறியுள்ளார். அதன்பிறகு இளையர்மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை இளையர் ஒப்புக்கொண்டார். அவருக்கு அடுத்த மாதம் தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
சிறுமியின் அடையாளத்தைப் பாதுகாக்கும்விதமாக அவரது பெயரும் குற்றம் செய்த இளையர் பெயரும் நீதிமன்றம் வெளியிடவில்லை.

