சான் ஃபிரான்சிஸ்கோவுக்குத் திருப்பி அனுப்பப்பட்ட எஸ்ஐஏ விமானம்

சான் ஃபிரான்சிஸ்கோவுக்குத் திருப்பி அனுப்பப்பட்ட எஸ்ஐஏ விமானம்

சிங்கப்பூர் வந்துகொண்டிருந்த அவ்விமானம் திருப்பி அனுப்பப்பட்டதற்கு ஒழுங்கின்றி நடந்துகொண்ட பயணி காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது
கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

16 Oct 2026 - 10:06 am

1 mins read

அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரிலிருந்து சிங்கப்பூர் வந்துகொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானம் புறப்பட்டு சில மணிநேரங்களுக்குப் பிறகு மீண்டும் சான் ஃபிரான்சிஸ்கோவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டது.

விமானத்தில் இருந்த பயணி ஒருவர் ஒழுங்கின்றி நடந்துகொண்டது அதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டது. அந்தப் பயணியின் நடத்தை குறித்த விவரங்கள் பகிரப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்எஸ்ஐஏவிமானம்அமெரிக்காபயணி