எஸ்ஐஏ: நவம்பர் 7 முதல் புதிய வடிவில் பிஸ்னஸ் வகுப்பு இருக்கைகள்

எஸ்ஐஏ: நவம்பர் 7 முதல் புதிய வடிவில் பிஸ்னஸ் வகுப்பு இருக்கைகள்

2 mins read
4c0d9b9d-dbb5-45ff-94c9-bc2bd3e19219
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், நெடுந்தொலைவுச் சேவை வழங்கும் ஏ350-900 வகை விமானங்களின் பிஸ்னஸ் வகுப்புப் பயணிகளுக்குப் புதிய வடிவில் இருக்கைகளை அமைக்கவிருக்கிறது. - படம்: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) தனது ‘ஏர்பஸ் ஏ350-900’ வகை விமானங்களில் புதிய வடிவிலான முதல் வகுப்பு, பிஸ்னஸ் வகுப்பு இருக்கைகளை அறிமுகப்படுத்தவுள்ளது.

2027ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்த இருக்கைகள் பயன்பாட்டுக்கு வரும். அதற்கு முன்னோடியாக, நவம்பர் 7ஆம் தேதி மரினா பே சேண்ட்ஸ் எக்ஸ்போ மற்றும் மாநாட்டு மையத்தில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில், ‘சாலிடேர் பிபிஎஸ்’, ‘பிபிஎஸ் கிளப்’ உறுப்பினர்களுக்கு இந்தப் புதிய இருக்கைகள் முதன்முதலாகக் காட்சிப்படுத்தப்படும்.

41 ‘ஏர்பஸ் ஏ350’ வகை விமானங்களின் உட்புறப் புதுப்பிப்புக்கான 1.1 பில்லியன் வெள்ளி மதிப்பிலான இந்த மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக புதிய வடிவிலான இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

விநியோகச் சங்கிலித் தடங்கல்கள் மற்றும் இருக்கைகளுக்கான சான்றிதழ் தாமதம் காரணமாக, திட்டமிட்ட நேரத்தைவிட இந்த மேம்பாட்டுப் பணி சற்றுத் தாமதமாகியுள்ளது. இவ்வகை இருக்கைகளை அடுத்த தலைமுறை போயிங் 777-9 வகை விமானங்களில் 2021ஆம் ஆண்டிலேயே அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும் விமானங்களைத் தயாரிப்பது தாமதமானதாகக் கூறப்பட்டது.

மேம்பாட்டுத் திட்டத்தைச் சிங்கப்பூரில் எஸ்ஐஏ இன்ஜினியரிங் நிறுவனம் மேற்கொள்கிறது.

நெடுந்தொலைவுச் சேவை வழங்கும் ஏ350-900 வகை விமானங்களில் பிஸ்னஸ் வகுப்பில் 42 இருக்கைகளும், பிரிமியம் இகானமி வகுப்பில் 24 இருக்கைகளும், இகானமி வகுப்பில் 192 இருக்கைகளும் அமைக்கப்படும். மிக நீண்ட தொலைவுச் சேவை வழங்கும் விமானங்களில் முதல் வகுப்பில் நான்கு இருக்கைகளும், பிஸ்னஸ் வகுப்பில் 70 இருக்கைகளும், பிரிமியம் இகானமியில் 58 இருக்கைகளும் இடம்பெறும்.

எஸ்ஐஏ என்ஜினியரிங் நிறுவனம் மேற்கொள்ளும் இந்த மாற்றங்கள், பயணிகளுக்கு மேம்பட்ட, வசதியான பயண அனுபவத்தை வழங்கும். மேலும், 2027 முதல் விமானங்களில் ‘ஸ்டார்லிங்க்’ அதிவேக இணையச் சேவையும் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்விமானம்இருக்கைகள்