சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் 2.5 டன் தங்கத்தை வாங்கிக் குவித்துள்ளனர்.
பொருளியல் தொடர்பான செய்திகள் சாதகமாக இல்லாததால் தங்கத்தின்மீது முதலீட்டாளர்கள் கவனத்தைச் செலுத்தியுள்ளனர்.
மேலும் உலகம் முழுவதும் தங்கத்தின்மீது முதலீட்டாளர்கள் அதிக அளவு முதலீடு செய்ததால் தற்போது ஓர் அவுன்ஸ் தங்கத்தின் விலை 3000 அமெரிக்க டாலரை கடந்துள்ளது.
இதற்கிடையே சிங்கப்பூரில் ஆண்டுக்கு ஆண்டு ஒப்பிடுகையில் 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு இவ்வாண்டு அதிகமாகத் தங்கம் வாங்கப்பட்டுள்ளது.
அதேபோல் இந்தோனீசியா, மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் தங்கத்திற்கான முதலீடுகள் அதிகரித்து வருகின்றன.
இருப்பினும் ஆசியான் நாடுகளில் தங்க நகைகள் வாங்கும் போக்கு குறைந்து வருகிறது. அதற்குப் பதில் தங்கக் கட்டிகள் தங்க நாணயங்களை மக்கள் வாங்கத் தொடங்கியுள்ளனர்.

