தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர் நிழற்படக் கலைஞர் லுய் ஹோக் செங் காலமானார்

2 mins read
லுய் அவரின் 81வது வயதில் முதல் நிழற்படக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்து மக்களின் பாராட்டைப் பெற்றார்.
e90cb441-a795-49a7-8864-18267707e084
சிங்கப்பூர் நிழற்படக் கலைஞர் லுய் ஹோக் செங் 81 வயதில் அவரின் முதல் நிழற்படக் கண்காட்சியை ஏற்பாடு செய்தபோது மக்களின் பாராட்டைப் பெற்றார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் நிழற்படக் கலைஞர் லுய் ஹோக் செங் காலமானார். அவருக்கு வயது 88. சுயமாக நிழற்பட வித்தையைக் கற்றுத்தேர்ந்த லுய், 81வது வயதில் முதல் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். பொதுமக்களிடம் அதற்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது.

நிமோனியா சளிக்காய்ச்சலுக்காக டான் டொக் செங் மருத்துவமனையில் லுய் சேர்க்கப்பட்டிருந்தார். லுய் காலமானதை அவரின் இளைய மகன் ரோஜர் லூய், 51, உறுதிப்படுத்தினார்.

2018ஆம் ஆண்டில் லுய்க்கு நிணநீர்ப் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. புற்றுநோய் மற்ற இடங்களுக்கும் பரவியதாக மருத்துவர்கள் அவரின் குடும்பத்தாரிடம் அண்மையில் தெரிவித்தனர்.

“நிழற்படக் கலை அவரின் வாழ்க்கையாக இருந்தது. அது ரத்தத்தில் ஊறியிருந்தது. அவர் எங்குப் போனாலும் நிழற்படக்கருவியை எடுத்துச் சென்றார்,” என்று திரு லூய் சொன்னார்.

ஓய்வு நேரத்தில் சிங்கப்பூரின் தெருக்களில் சுற்றித்திரிந்து ஏறக்குறைய 60 ஆண்டுகாலம் படம் பிடித்தார். 1960கள், 1970களில் அவர் எடுத்த கறுப்பு வெள்ளைப் படங்கள் கடந்த சில ஆண்டுகளில் மக்களிடையே அங்கீகாரம் பெற்றன.

முதுமையில் எப்படி வாழவேண்டும் என்பதற்கு லுய் ஓர் எடுத்துக்காட்டு என்று ஒரு முறை மூத்த அமைச்சர் லீ சியன் லூங் பாராட்டியிருந்தார்.

இயந்திரத் தொழில்நுட்பராக வேலையைத் தொடங்கிய லுய் பின்னர் துப்புரவாளராக இருந்தார். 2012ல் சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்சில் (இப்போது எஸ்பிஎச் மீடியா) வேலைக்குச் சேர்ந்தார். அங்குதான் நிழற்படக் கலையில் அவருக்கு இருந்த ஆர்வமும் ஆற்றலும் தெரியவந்தன. புற்றுநோய் வந்த பிறகு, அவர் வேலையிலிருந்து விலகினார்.

காலஞ்சென்ற லுய், மூன்று மகன்களையும் இரண்டு பேரக்குழந்தைகளையும் விட்டுச் செல்கிறார்.

குறிப்புச் சொற்கள்