கிராஞ்சியில் ஐந்து கார்கள் மோதிகொண்ட விபத்துடன் தொடர்புடைய 65 வயது பேருந்து ஓட்டுநர் வெள்ளிக்கிழமை (மே 23) மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
60 ஜாலான் லாம் ஹுவாட்டில் பிற்பகல் 12.30 மணியளவில் விபத்து குறித்து காவல்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.
கெரோஸ் சென்டர் என்ற கார் தொழிற்சாலை வளாகம் அங்கு அமைந்துள்ளது.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பேருந்து ஓட்டுநர் சுயநினைவுடன் இருந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். அவர் விசாரணையில் உதவி வருகிறார்.
ஒன் டிரைவ் ஆட்டொமொபில் கார் நிறுவனத்துக்கு வெளியில் உள்ள கார் நிறுத்திமிடத்தில் விபத்து நேர்ந்ததாக இணையத்தில் பதிவேற்றப்பட்ட காணொளியில் தெரிகிறது.
பல கார்கள் நிறுத்தப்பட்டிருந்த அந்தப் பகுதியில் திடீரென ஒரு வெள்ளை நிற தனியார் பேருந்து செல்வதைக் காண முடிகிறது.
விபத்தில் குறைந்தது ஒரு கார் சேதமுற்றதாகத் தெரிகிறது. அருகில் இருந்த மேசை, நாற்காலி உள்ளிட்டவையும் சேதமடைந்தன.

