அண்மையில் நடந்த முடிந்த பொதுத் தேர்தலில் மக்கள் செயல் கட்சி அபார வெற்றி பெற்றது.
97 இடங்களில் 87 இடங்களை மக்கள் செயல் கட்சி கைப்பற்றியது.
அதுமட்டுமல்லாது, அதன் மொத்த வாக்குகள் எண்ணிக்கை 65.57 விழுக்காடாக உயர்ந்தது.
எதிர்க்கட்சியான பாட்டாளிக் கட்சி, நாடாளுமன்றத்தில் பத்து இடங்களைப் பிடித்தது.
மற்ற எதிர்க்கட்சிகள் படுதோல்வி அடைந்தன.
அவை வெறும் 1.19 விழுக்காட்டிலிருந்து 36.25 விழுக்காடு வாக்குகளை பெற்றன.
இந்நிலையில், சிறிய எதிர்க்கட்சிகள் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்குகின்றன.
சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி ஆறு தொகுதிகளில் போட்டியிட்டது.
தொடர்புடைய செய்திகள்
போட்டியிட்ட தொகுதிகள் அனைத்திலும் அது தோல்வி அடைந்தது.
இத்தோல்வி அக்கட்சிக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும் செய்தியாளர் கூட்டங்களை அது ரத்து செய்தது.
தேர்தல் முடிவுகளில் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியும் ஓரிடத்திலும் வெற்றி பெறவில்லை.
செம்பவாங் வெஸ்ட் தனித்தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றார் அக்கட்சியின் தலைமைச் செயலாளர் சீ சூன் ஜுவான்.
தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினராகும் வாய்ப்பும் அவருக்குக் கிடைக்கவில்லை.
தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி, மக்கள் சக்திக் கட்சி, சிங்கப்பூர் ஐக்கிய கட்சி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த அனைத்து வேட்பாளர்களும் தங்களுடைய $13,500 வைப்புத் தொகையை இழந்தனர்.
சீர்திருத்த மக்கள் கூட்டணியின் இரண்டு வேட்பாளர்கள் தங்கள் வைப்புத் தொகையை இழந்தனர்.
குறைந்தது 12.5 விழுக்காடு வாக்குகளைப் பெறாத வேட்பாளர்கள் தங்கள் வைப்புத் தொகையை இழப்பர்.
2025ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்த வேட்பாளர்கள் இழந்த வைப்புத் தொகை $364, 500.
மக்கள் செயல் கட்சிக்குப் பேராதரவு இருப்பதைப் பொதுத் தேர்தல் முடிவுகள் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாது, நம்பமான எதிர்க்கட்சியாகப் பாட்டாளிக் கட்சியை வாக்காளர்கள் ஏற்றுக்கொண்டிருப்பதாக அரசியல் விமர்சகரான லோக் ஹோ யோங் தெரிவித்தார்.
போட்டியில் இருக்க வேண்டும் என்றால் சிறிய கட்சிகள் தேர்தல் நேரங்களில் மட்டுமே வெளிவந்தால் போதாது என்று தேசிய தொழில்நட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஏலன் சோங் கூறினார்.
மற்ற நேரங்களிலும் தொகுதி மக்களை அக்கட்சியினர் சந்தித்துப் பேச வேண்டும்.
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைப் பற்றி அவர்கள் கருத்துரைக்க வேண்டும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

