தொண்டூழியம்: ஊக்குவிக்க புதிய உதவித் திட்டங்கள்

தொண்டூழியம்: ஊக்குவிக்க புதிய உதவித் திட்டங்கள்

15 Apr 2016 - 7:21 am

1 mins read

தமிழவேல்

தனிப்பட்டவர்களுக்கும் நிறுவனங் களுக்கும் இடையே சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் தொண்டூழியத்தை ஊக்குவிக்க அரசாங்கத்திடமிருந்து மேலும் உதவி கிடைக்கவுள்ளது. தேசிய அடையாளத்தை வளர்க்கும் அல்லது சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திட்டங்களுக்கு 'நமது சிங்கப்பூர் நிதி' மூலம் அதிகபட்சம் $50,000 என அத்திட்டத்தின் 80 விழுக் காடு வரை நிதி உதவி வழங்கப் படும். தனது அமைச்சின் நிதி ஒதுக்கீட்டு விவாத்தின்போது நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய கலாசார, சமூக, இளையர் அமைச்சர் கிரேஸ் ஃபூ இதனைத் தெரிவித்தார்.

தொண்டூழி யத்தை ஊக்குவிக்க தனிப்பட்டவர் களுக்கும் நிறுவனங் களுக்கும் அரசாங்கத் திடமிருந்து கூடுதல் உதவி கிடைக்க உள்ளது. கோப்புப் படம்