சிங்கப்பூர் விலங்கு காட்சிசாலை யில் ஓமர் என்ற வெண்புலி இறந்துவிட்டதாக சிங்கப்பூர் வன விலங்கு காப்பகம் நேற்று அறி வித்தது. "நம்முடைய 18 வயது மூத்த வெண்புலி ஓமர் இறந்துவிட்டது குறித்து மிகவும் வருந்துகிறோம். சிங்கப்பூர் விலங்குக் காட்சிசாலை யின் அடையாளமாகத் திகழ்ந்த அந்த வெண்புலி தன்னுடைய கம்பீரமான தோற்றத்தால் பலரை யும் கவர்ந்து வந்தது," என்று இந்தக் காப்பகம் குறிப்பிட்டது. இந்தப் புலி, கடந்த மூன்று ஆண்டுகாலமாக ஒரு வகை தோல் புற்றுநோயால் பாதிக்கப் பட்டு அணுக்கமாகக் கண் காணிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
இறந்துவிட்ட ஓமர் வெண்புலி. படம்: சிங்கப்பூர் வனவிலங்கு காப்பகம்