வில்சன் சைலஸ்
சிங்கப்பூரில் உருவாகும் தமிழ்ப் படைப்புகளுக்குத் தமிழ்நாட்டு விருதுகள் மூலம் அங்கீகாரம் தரப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று தமிழகத்தின் அமைச்சர் திரு கே. பாண்டியராஜன் அறிவித்தார். சிங்கப்பூருக்குக் கடந்த ஞாயிற் றுக்கிழமை வருகை புரிந்த அவர், தமது மூன்று நாள் பயணத்தின் ஓர் அங்கமாக சிலோன் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நேற்று உள்ளூர் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்தார். கலந்துரையாடலின்போது சிங் கப்பூர் எழுத்தாளர்களின் படைப்பு கள் தமிழக நூலகங்களில் இடம் பெறுவது குறித்தும் தொழில்நுட்பத் தின் உதவியுடன் தமிழ்மொழியின் தரத்தை உயர்த்துவது பற்றியும் பேசப்பட்டது. தமிழ்மொழி தொடர்பாக சிங் கப்பூர் மேற்கொள்ளும் முயற்சிகளைப் பாராட்டிய அவர், தமிழகத் தில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் தமிழ்ச் செம்மல் விருதை அடுத்த ஆண்டு அயல்நாட்டு தமிழ்ப் படைப்புகளுக்கும் வழங்க திட்டம் உள்ளதாகக் கூறினார்.
சிலோன் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் தமிழ்மொழி, கலாசார அமைச்சர் கே பாண்டியராஜன் (நடு) தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவர் நா ஆண்டியப்பன் (இடது), டாக்டர் சுப திண்ணப்பன் ஆகியோர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

