பணியில் 4,000க்கும் மேற்பட்ட  அங்கீகாரம் பெற்ற இஸ்லாமிய சமய போதகர்கள் 

சிங்கப்பூரில் தேசிய அடிப்படை யிலான அசாடிஸா அங்கீகரிப்புத் திட்டத்தின் (ஏஆர்எஸ்) அங்கீ காரம் பெற்ற 4,000க்கும் அதிகமான இஸ்லாமிய சமய போதகர்கள் பணியாற்றுவதாக முஸ்லிம் விவகாரங்களுக்கான அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி தெரிவித்துள்ளார். 
ஏஆர்எஸ்ஸின் உயர் தரத்தை எட்டாதவர்கள் அதற் கான பதிவேட்டிலிருந்து நீக்கப் படுவார்கள்.
2017ஆம் ஆண்டு கட்டாய மாக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் படி, சமய போதகர்கள் தீவிர வாதம், வன்முறைக்கு ஊக்க மளிக்காது இருத்தல், மற்ற இன, சமயப் பிரிவுகளை இழிவு படுத்தாமல் இருப்பது ஆகிய பண்புகள் அடங்கிய நெறி முறைக்கு தங்களை உட் படுத்திக்கொள்ள வேண்டும்.
சமய போதகர்கள் தீவிரவாத சிந்தனைகளைக் கொண்டிருக் காமல் இருப்பதை உறுதிசெய்ய மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் குறித்து நியமன நாடாளுமன்ற உறுப்பினர் அபாஸ் அலி முகம்மது இர்ஷாத் நேற்று நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் மசகோஸ் பதிலளித்தார்.
அசாடிஸா  அங்கீகார வாரியம் சமூகத்திலும் வெளி நாடுகளிலும் மதிப்புமிக்க, மூத்த உறுப்பினர்களைக் கொண் டுள்ளதுடன் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றத்தின் (முயிஸ்) ஆதரவையும் பெற்றது.
இதில், வாரியமும் முயிசும் ஏஆர்எஸ் பதிவை  முக்கியமாக எடுத்துக்கொள்கின்றன. இதில் பொறுப்புள்ள சமய போதகர்கள் மட்டுமே அங்கீகாரம் பெறுவதை உறுதிசெய்யும் நடைமுறைகள் உள்ளன.