நடுத்தர வயது பெண் பராமரிப்பாளர்களுக்கு கூடுதல் சம்பளம்

பராமரிப்பாளர்களாகப் பணியாற் றும் நடுத்தர வயது பெண்களின் சம்பளத்தை அதிகரிக்கும் வழி வகைகளை தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) ஆராயவி ருக்கிறது.
அவ்வாறு செய்ய வேண்டு மானால், சமூகத்தில் உள்ள முதி யோர் பராமரிப்புச் சேவைகள் பற்றி யும் அவற்றுக்கு எவ்வாறு நிதி ஆதரவு அளிப்பது என்பது பற்றியும் என்டியுசி பரிசீலிக்கும்.
என்டியுசி, சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனம், மனித வள அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து இது குறித்து ஆராய்ந்து, நடுத்தர வயது பெண்கள் மீண்டும் ஊழியரணியில் சேர்வது குறித்து வழிகளைப் பரிந் துரைக்கும். 
“பராமரிப்பாளர்கள் உட்பட அனைத்து சிங்கப்பூரர்களும் நிலையான ஊதியம் பெறுவதற்கும் முக்கியமாக தங்கள் ஓய்வுகாலத் துக்குப் போதுமான தொகையைச் சேமித்து வைப்பதற்கும் வழி வகுப் பது அவசியமானது,” என்று என்டியுசி தனது அறிக்கையில் கூறியது.