கடந்த ஆண்டு ஜிசிஇ மேல்நிலைத் தேர்வு (ஏ நிலை) எழுதியோரில் 93.3 விழுக்காட்டினர் குறைந்தது மூன்று பாடங்களில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த 13 ஆண்டுகள் இல்லாத அளவில் சிறப்பான மேல்நிலைத் தேர்வு முடிவாகும். கடந்த ஆண்டு மேல்நிலைத் தேர்வு எழுதியோரில் 13,042 பேர் பள்ளி மாணவர்கள். அவர்களில் 12,170 பேர் குறைந்தது மூன்று பாடங்களில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதே சமயத்தில் பொதுத் தாள் அல்லது அறிவுசார் ஆய்வியல் பாடத்திலும் தேர்ச்சி பெற்றனர். இந்தத் தகவலைக் கல்வி அமைச்சும் சிங்கப்பூர் தேர்வுகள், மதிப்பீட்டுக் கழகமும் நேற்று வெளியிட்டன.
ஜிசிஇ மேல்நிலைத் தேர்வு: 13 ஆண்டுகளில் இல்லாத சிறப்பு
1 mins read
-