போதைப்புழக்கம்:  அதிக இளையர் கைது

PHOTO: THE NEW PAPER

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட போதைப் புழங்கிகளில் 40 விழுக்காட்டினர் முதல்முறை குற்றம் புரிந்தோர் என்றும் இவர்களில் மூவரில் இருவர் முப்பது வயதுக்கும் குறை வானர்கள் என்றும் சிஎன்பி எனப் படும் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தனது ஆண் டறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த இரு அம்சங்களும் கவலைக்குரியவை என்று மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு இயக்குநர் இங் செர் சோங் குறிப் பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு முழுவதும் 3,438 போதைப் புழங்கிகள் கைது செய்யப்பட்டதாகவும் 2017ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 11 விழுக்காடு குறைவாக 3,091 என்று இருந்ததாகவும் அறிக்கை குறிப்பிட்டது. இவர்களில் 20 வய துக்கும் 29 வயதுக்கும் இடைப் படவர்கள் 1,010 பேர்.
மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் மீண்டும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடு பட்டு கைதானோரின் எண் ணிக்கை கடந்த ஆண்டு 12 விழுக்காடு அதிகரித்து 2,072 ஆனது. இந்த எண்ணிக்கை 2017ஆம் ஆண்டு 1,842 ஆக இருந்தது.
முதல்முறை போதைப் புழக்கக்  குற்றம் புரிந்து கைதானோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 9 விழுக்காடு அதிகரித்து 1,366 ஆனது. இவர்களில் 64 விழுக்காட்டினர் 30 வயதுக்கும் கீழானவர்கள். இதற்கு முந்திய ஆண்டில் இந்த எண்ணிக்கை 1,249 ஆக இருந்தது. 
போதைப் புழக்கக் குற்றத்திற் கான கைது எண்ணிக்கை எல்லா இனத்தவரிடையேயும் அதிகரித்து காணப்பட்டது. அவர்களில் மலாய் இனத்தவர் எண்ணிக்கை ஆக அதிகமாக 1,760 ஆக இருந் தது. இதற்கு அடுத்த நிலையில் சீன இனத்தவரில் 974 பேர் கைதானார்கள்.