சுடச் சுடச் செய்திகள்

தனக்குத் தானே மருத்துவ விடுப்பு கொடுத்த மருத்துவர்

நவம்பர் 20ஆம் தேதி சாங்கி பொது மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த மருத்துவர் போலியான மருத்துவ விடுப்புச் சான்றிதழைத் தனது வேலையிடத்தில் சமர்ப்பித்தார். தனியார் மருந்தகம் ஒன்றில் விடுப்பு மருத்துவராகப் பணியாற்றுவதற்காக அவர் அவ்வாறு செய்தார். 28 வயது ஜொவெல் அருண் சுர்சாஸ் இந்தக் குற்றத்தைச் செய்ததை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். அவருக்குத் தண்டனை விதிக்கப்படும்போது மேலும் மூன்று குற்றச்சாட்டுகள் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும். 

நவம்பர் 25ஆம் தேதி ஜொவெல் அருண் தனக்குத் தானே மருத்து விடுப்புச் சான்றிதழ் அளித்துக்கொண்டார். ‘எடர்ன்’ மருந்தகத்தில் மற்றொரு விடுப்பு மருத்துவர் அதனை வழங்கியதுபோல சான்றிதழை மாற்றியமைத்தார். அந்தப் போலியான சான்றிதழை ஜொவெல் பின்னர் சாங்கி மருத்துவமனையிடம் அளித்தார்.  

ஜொவெல் 47 முறை வெவ்வேறு மருந்தகங்களில் விடுப்பு மருத்துவராகப் பணியாற்றியதாக சிங்கப்பூர் மருத்துவச் சங்கம் கடந்தாண்டு அக்டோபர் கண்டுபிடித்தது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon