3 மணி நேரத்தில் 7 கடைகளில் திருடிய ஆஸ்திரேலியருக்கு 12 நாள் சிறை

1 mins read

சாங்கி விமானநிலையத்தில் உள்ள கடைகளில் இருந்து $10,000க்கும் மேற்பட்ட மதிப்புள்ள பொருட்களைத் திருடிய பாய்லி சாட் பிலிப், 45, என்ற ஆஸ்திரேலியருக்கு 12 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஜெர்மனியில் இருந்து மெல்பர்ன் நகருக்குச் செல்லும் வழியில் இங்கு இருந்தபோது அவர், ஆகஸ்ட் 12ஆம் தேதி 3 மணி நேரத்தில் ஏழு கடைகளில் திருடினார்.

போலிசார் முனையம் 1ன் புறப்பாட்டுக் கூடத்தில் அவரை பிடித்துச் சோதனையிட்டனர். திருடிய பொருட்கள் அந்தந்தக் கடைகளிடம் ஒப்படைக்கப்பட்டன. அந்த நபர் மதுபானம், சிகரெட் உள்ளிட்ட பொருட்களைத் திருடினார்.