தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆர்ச்சர்ட் ரோட்டின் ஒரு பகுதி பாதசாரி நடைபாதையாகும்

1 mins read
cad30e71-5dcf-46eb-aea7-055f4073aed2
ஆர்ச்சர்ட் ரோட்டின் ஒரு பகுதி காரற்ற பசுமைப் பகுதியாக மாறக்கூடும். மேலும் அதன் ஒரு பகுதி பாதசாரிகள் பயன்படுத்தும் நடைபாதையாகவும் மாறும். படம்: எஸ்டி -

ஆர்ச்சர்ட் ரோட்டின் ஒரு பகுதி காரற்ற பசுமைப் பகுதியாக மாறக்கூடும். மேலும் அதன் ஒரு பகுதி பாதசாரிகள் பயன்படுத்தும் நடைபாதையாகவும் மாறும்.

அது இஸ்தானா பூங்கா, டோபி காட் கிரீன் ஆகியவற்றை உள்ளடக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த உத்தேச திட்டத்தின்படி, இஸ்தானாவுக்கு வெளியே உள்ள ஆர்ச்சர்ட் ரோடு முதல் 'எஸ்எம்ஏ ஹவுஸ்' வரை பினாங்கு ரோட்டையும் உள்ளடக்குவதாக இருக்கும்.

சிங்கப்பூரின் பொருள் வாங்கும் மையத்தின் உருமாற்றம் பற்றிய கண்காட்சியில் நகர மறுசீரைமப்பு ஆணையமும் தேசிய பூங்காக் கழகமும் இவ்விவரங்களை வெளியிட்டன. இதன் தொடர்பிலான புகைப்படக் கண்காட்சி 'யுஆர்ஏ' சென்டரில் ஒரு மாதத்துக்கு நடைபெறும்.

"இந்த முயற்சிகள் நகரத்தில் ஒரு புதிய பசுமைப் பகுதியை உருவாக்கும். பசுமை வாய்ந்த, பூங்காவுக்குள் வாழத்தக்க இடமாக சிங்கப்பூரை உயிர்ப்பிக்க எடுக்கப்படும் முயற்சிகளில் இது ஒரு பகுதி," என்று கண்காட்சியின் தொடக்க விழாவில் கூறினார் தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங்.