தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காப்பு நிதியில் இருந்து $17 பில்லியன்; அதிபர் ஹலிமா ஒப்புதல்

1 mins read
ef3730c9-ab16-4fc0-b4bd-4d7dc5bb2765
கொரோனா தொற்­றால் நெருக்­கடி அதி­க­ரித்­து­வ­ரும் நிலை­யில், வேலை­க­ளை­யும் பொரு­ளி­ய­லை­யும் பாது­காப்­ப­தற்­கா­கக் காப்­பு­நி­தி­யில் இருந்து அர­சாங்­கம் $17 பில்­லியன் பணத்தை எடுக்­க­வி­ருக்­கிறது. படம்: GOV.SG -

கொரோனா தொற்­றால் நெருக்­கடி அதி­க­ரித்­து­வ­ரும் நிலை­யில், வேலை­க­ளை­யும் பொரு­ளி­ய­லை­யும் பாது­காப்­ப­தற்­கா­கக் காப்­பு­நி­தி­யில் இருந்து அர­சாங்­கம் $17 பில்­லியன் பணத்தை எடுக்­க­வி­ருக்­கிறது.

காப்பு நிதி­யி­லி­ருந்து இவ்­வ­ளவு பெரிய தொகை எடுக்­கப்­படவிருப்­பது இதுவே முதல்­முறை. இதற்கு அதி­பர் ஹலிமா யாக்­கோப் கொள்கை அள­வில் ஒப்­பு­தல் வழங்கி­விட்­ட­தாக துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

இதற்­கு­முன் ஒரே ஒரு­முறை காப்பு நிதி­யில் இருந்து பணம் எடுக்­கப்­பட்­டுள்­ளது. 2009ஆம் ஆண்­டில் உல­க­ளா­விய நிதி நெருக்­கடி ஏற்­பட்­ட­போது $4.9 பில்­லி­யன் எடுக்­கப்­பட்­டது. ஆயி­னும், வேலை­க­ளைத் தக்­க­வைக்­கும் உத­வித் திட்­டங்­களுக்­காக $4 பில்­லி­யன் மட்­டும் செல­வி­டப்­பட்­டது.

பொரு­ளி­யல் நிலைமை சீர­டைந்த­தும் 2011ஆம் ஆண்­டில் அந்­தத் தொகை மீண்­டும் காப்பு நிதி­யில் சேர்க்­கப்­பட்­டு­விட்­டது.

நிலைமை மேலும் மோச­ம­டைந்து, தேவைப்­படும் பட்­சத்­தில் காப்பு நிதியில் இருந்து மேலும் பணம் எடுக்க தாம் பரிந்துரைக்கத் தயாராக இருப்பதாகவும் துணைப் பிரதமர் குறிப்பிட்டார்.

"கொரோனா தொற்­று நம் நாட்­டிற்குப் பல அச்­சு­றுத்­தல்­க­ளை­ விடுத்துள்ளது. இது­போன்ற இக்­கட்­டான சூழலுக்­கா­கத்­தான் நாம் காப்பு நிதி­யைச் சேமித்து வைத்­துள்­ளோம்," என்றார் நிதியமைச்சருமான திரு ஹெங்.