26,000 கடைகளுக்கு சேவைக் கட்டணத்தில் 15% தள்ளுபடி

மக்கள் செயல் கட்சி (மசெக) நிர்வகிக்கும் நகரங்களில் உள்ள சுமார் 26,000 கடைகளுக்கும் சந்தை அங்காடிகளுக்கும் வரும் ஜூலை முதல் அக்டோபர் வரை சேவை, பயனீட்டுக் கட்டணத்தில் 15% தள்ளுபடி கொடுக்கப்படும்.

கொரோனா நோய்ப் பரவலால் பாதிக்கப்பட்டிருக்கும் கடை உரிமையாளர்களுக்கும் உணவங்காடிக்காரர்களுக்கும் உதவுவதற்காக இந்த நிவாரண உதவி மூலம் கிட்டத்தட்ட $3 மில்லியன் செலவழிக்கப்படும் என்று மசெக நகர மன்றங்களின் ஒருங்கிணைப்புத் தலைவர் டாக்டர் டியோ ஹோ பின் நேற்று தெரிவித்தார்.

சிங்கப்பூரில் உள்ள 16 நகர மன்றங்களில் 15ஐ மக்கள் செயல் கட்சி நிர்வகிக்கிறது. எஞ்சியுள்ள அல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்றத்தைப் பாட்டாளிக் கட்சி நிர்வகிக்கிறது.