சுடச் சுடச் செய்திகள்

சிங்கப்பூரில் இரு வகை தடுப்பூசி பயன்பாட்டை நிறுத்த அமைச்சு அறிவுறுத்து

சளிக்­காய்ச்­ச­லுக்கு எதி­ராக போட்­டுக்­கொள்­ளப்­படும் இரு வகை­யான தடுப்­பூ­சி­க­ளைப் பயன்­ப­டுத்த வேண்­டாம் என்று சுகா­தார அமைச்சு அறி­வு­றுத்­தி­யுள்­ளது. SKYCellflu Quadrivalent மற்­றும் VaxigripTetra ஆகி­யன இந்­தத் தடுப்­பூ­சி­கள்.

தென்­கொ­ரி­யா­வில் இந்­தத் தடுப்­பூ­சி­க­ளைப் போட்­டுக்­கொண்ட சிலர் உயி­ரி­ழந்­த­தாக தக­வல்­கள் வெளி­யா­ன­தைத் தொடர்ந்து இந்த முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக சுகா­தார அமைச்­சும் சுகா­தார அறி­வி­யல் ஆணை­ய­மும் நேற்று முன்­தி­னம் தெரி­வித்­தன.

தென்­கொ­ரி­யா­வில் இந்­தத் தடுப்­பூ­சி­க­ளைப் போட்­டுக்­கொண்ட பிறகு 36 பேர் மர­ணம் அடைந்­த­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­தழ் முன்­ன­தாக செய்தி வெளி­யிட்டு இருந்­தது. இந்­நி­லை­யில், சிங்­கப்­பூ­ரில் இந்­தத் தடுப்­பூ­சி­க­ளைப் போட்­டுக்­கொண்ட பிறகு உயிர் இ­ழப்பு எது­வும் ஏற்படவில்லை என்று சுகா­தார அமைச்­சும் சுகா­தார அறி­வி­யல் ஆணை­ய­மும் தெரி­வித்­தன.

சளிக்­காய்ச்­ச­லுக்கு எதி­ராக தென்­கொ­ரி­யா­வில் ஏழு வகை­யான தடுப்­பூ­சி­கள் மக்­க­ளுக்­குப் போடப்­பட்­டி­ருந்­த­தாக அந்­நாட்டு அதி­காரி­கள் தக­வல் வெளி­யிட்­ட­னர். அவற்­றைப் போட்­டுக்­கொண்­ட­வர்­களில் 36 பேர் மர­ண­ம­டைந்­த­னர்.

அந்த ஏழு மாதி­ரி­யான தடுப்­பூ­சி­களில் மேற்­கூ­றப்­பட்ட இரு வகை சிங்­கப்­பூ­ரில் கிடைக்­கின்­றன.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டது தொடர்­பில் தென்­கொ­ரி­யா­வில் பதி­வான மர­ணங்­க­ளின் தாக்­கத்­தை சுகா­தார அறி­வி­யல் ஆணை­யம் மதிப்­பிட்டு வரு­கிறது. இந்­நி­லை­யில் அந்த இரு வகை­யான தடுப்­பூ­சி­க­ளின் பயன்­பாட்­டைத் தற்­காலி­க­மாக நிறுத்தி வைக்­கு­மாறு சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு வழங்­கு­நர்­களி­டம் சுகா­தார அமைச்சு கூறி­ உள்­ளது.

எனி­னும், சளிக்­காய்ச்­சல் பரு­வத்தை முன்­னிட்டு சிங்­கப்­பூ­ருக்கு வர­வ­ழைக்­கப்­பட்ட வேறு இரு மாதி­ரி­யான தடுப்­பூ­சி­க­ளைத் தொடர்ந்து பயன்­ப­டுத்­த­லாம் என்று சுகா­தார அமைச்­சும் சுகா­தார அறி­வி­யல் ஆணை­ய­மும் தெரி­வித்­தன.

எந்­த­வொரு மருந்­தை­யும் போன்று தடுப்­பூ­சி­களும் பக்­க­விளைவு­களை ஏற்­ப­டுத்­தக்­கூ­டும். காய்ச்­சல், தலை­வலி, தசை­வலி, சோர்வு, குமட்­டல் உள்­ளிட்­டவை பக்­க­வி­ளை­வுக்­கான சில அறி­குறி­கள்.

“பொது­வாக இந்­தப் பக்­க­வி­ளை­வு­கள் இலே­சாக இருக்­கும் என்­றும் அவை தானா­கவே குண­மா­கி­வி­டும் என்றும் கூறப்படுகிறது. அரி­தான சில வேளை­களில், கடும் காய்ச்­சல் அல்­லது மூச்­சுத்­தி­ண­றல், கண்­வீக்­கம் போன்ற கடு­மை­யான ஒவ்­வாமை ஏற்­ப­ட­லாம். அப்­போது உட­ன­டி­யாக மருத்­துவ உத­வியை நாட வேண்­டும்,” என்று இரு அமைப்­பு­களும் அறி­வு­றுத்­தி­யுள்­ளன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon