சிங்கப்பூரில் பல்வேறு இடங்களில் பல பெண்களை முறையற்ற வகையில் காணொளி எடுத்த ஆடவருக்கு நன்னடத்தைக் கண்
காணிப்பு பரிந்துரைக்கப்படவில்லை என்று அரசாங்க வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
நன்னடத்தை கண்காணிப்பு விதிக்கப்படுவது தொடர்பாக மதிப்பீடு செய்யப்பட்டதை அடுத்து நீதிமன்றத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. பெண்களின் மானத்துக்குப் களங்கம் விளைவித்தது தொடர்பாக அந்த 23 வயது ஆடவருக்கு எதிராக ஏழு குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.
பிரிட்டனில் உள்ள தலைச்
சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றில் பயின்ற அந்த ஆடவர் தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு களை ஒப்புக்கொண்டார்.
குற்றச்சாட்டை எதிர்நோக்கும் ஆடவரை மதிப்பீடு செய்த நன்னடத்தைக் கண்காணிப்பு அதிகாரியிடமும் உளவியல் நிபுணரிடமும் சில கேள்விகள் கேட்க விரும்புவதாக தற்காப்பு வழக்கறிஞர் காளிதாஸ் முருகையன் நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தார். மதிப்பீடு எவ்வாறு நடத்தப்பட்டது என்பது குறித்து தாம் அறிய விரும்புவதாக அவர் மாவட்ட நீதிபதியிடம் தெரிவித்தார்.
குற்றச்சாட்டை எதிர்நோக்கும் ஆடவர் $20,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். வழக்குக்கு முந்திய கலந்துரையாடல் அடுத்த மாதம் 18ஆம் தேதி நடைபெறும்.
அந்த ஆடவர் 12 பெண்களை முறையற்ற வகையில் காணொளி எடுத்தார் என்றும் அவர்களில் 11 பேர் அடையாளம் காணப்பட்டதாகவும் ஒருவரின் அடையாளம் தெரியவில்லை என்றும் கடந்த ஜூலை மாதம் 29ஆம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
குற்றச்சாட்டை எதிர்நோக்கும் ஆடவரின் பெயரையும் அவர் பயின்ற பல்கலைக்கழகத்தின் பெயரையும் வெளியிடக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளத்தைப் பாதுகாக்க இந்த முடிவு எடுக்கப்பட்டபோதிலும் ஆடவரின் பெயரை வெளியிடவேண்டும் என்று அப்பெண்கள் ஒருமனதாக விருப்பம் தெரிவித்திருப்பதை அரசாங்க வழக்கறிஞர் சுட்டினார். எனவே அவரது பெயரை வெளியிட நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என்று அரசாங்க வழக்கறிஞர்
கேட்டுக்கொண்டார்.
ஆனால் அரசாங்க வழக்கறிஞரின் இந்த விண்ணப்பத்தை நிராகரிக்கும்படி குற்றச்சாட்டை எதிர்நோக்கும் ஆடவரைப் பிரதிநிதிக்கும் இன்னொரு வழக்கறிஞரான திரு அஷ்வின் ஹரிஹரன் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார். இதே போன்ற விண்ணப்பத்தை அரசாங்க வழக்கறிஞர் முன்பு
தாக்கல் செய்து அது நிராகரிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
ஆடவரின் பெயரை வெளியிட விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்
படுகிறது என்று நீதிபதி கூறியதும் அதுகுறித்து உயர் நீதிமன்றத்திடம் மேல்முறையீடு செய்யப்போவதாக தற்காப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே, பெயரை வெளியிட விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது. பெண் குளிக்கும்போது அவருக்குத் தெரியாமல் காணொளி எடுத்தது, தமது வீட்டின் கழிவறையில் யாருக்கும் தெரியாமல் மறைவான இடத்தில் கேமராவைப் பொருத்தியது, பெண்
களின் பாவாடைகளுக்குள் படமெடுத்தது போன்ற குற்றங்களில் அந்த ஆடவர் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

