பெண்களை முறையற்ற வகையில் காணொளி எடுத்தவருக்கு நன்னடத்தைக் கண்காணிப்பு பரிந்துரைக்கப்படவில்லை

2 mins read
d69eac08-150f-4098-9bee-d70fd70594b3
-

சிங்­கப்­பூ­ரில் பல்­வேறு இடங்­களில் பல பெண்­களை முறை­யற்ற வகை­யில் காணொளி எடுத்த ஆட­வ­ருக்கு நன்­ன­டத்­தைக் கண்­

கா­ணிப்பு பரிந்­து­ரைக்­கப்­ப­ட­வில்லை என்று அர­சாங்க வழக்­க­றி­ஞர் தெரி­வித்­துள்­ளார்.

நன்­ன­டத்தை கண்­கா­ணிப்பு விதிக்­கப்­ப­டு­வது தொடர்­பாக மதிப்­பீடு செய்­யப்­பட்­டதை அடுத்து நீதி­மன்­றத்­தில் இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டது. பெண்­க­ளின் மானத்­துக்­குப் களங்கம் விளை­வித்­தது தொடர்­பாக அந்த 23 வயது ஆட­வ­ருக்கு எதி­ராக ஏழு குற்­றச்­சாட்­டு­கள் பதி­வா­கி­யுள்­ளன.

பிரிட்­ட­னில் உள்ள தலைச்

சி­றந்த பல்­க­லைக்­க­ழ­கங்­களில் ஒன்­றில் பயின்ற அந்த ஆட­வர் தம்­மீது சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்­டு­ களை ஒப்­புக்­கொண்­டார்.

குற்­றச்­சாட்டை எதிர்­நோக்­கும் ஆட­வரை மதிப்­பீடு செய்த நன்­ன­டத்­தைக் கண்­கா­ணிப்பு அதி­கா­ரி­யிடமும் உள­வி­யல் நிபு­ண­ரி­ட­மும் சில கேள்­வி­கள் கேட்க விரும்­பு­வ­தாக தற்­காப்பு வழக்­க­றி­ஞர் காளி­தாஸ் முரு­கை­யன் நீதி­மன்­றத்­தில் நேற்று தெரி­வித்­தார். மதிப்­பீடு எவ்­வாறு நடத்­தப்­பட்டது என்­பது குறித்து தாம் அறிய விரும்­பு­வ­தாக அவர் மாவட்ட நீதி­ப­தி­யி­டம் தெரி­வித்­தார்.

குற்­றச்­சாட்டை எதிர்­நோக்­கும் ஆட­வர் $20,000 பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளார். வழக்­குக்கு முந்­திய கலந்­து­ரை­யா­டல் அடுத்த மாதம் 18ஆம் தேதி நடை­பெ­றும்.

அந்த ஆட­வர் 12 பெண்­களை முறை­யற்ற வகை­யில் காணொளி எடுத்­தார் என்­றும் அவர்­களில் 11 பேர் அடை­யா­ளம் காணப்­பட்­ட­தா­க­வும் ஒரு­வ­ரின் அடை­யா­ளம் தெரி­ய­வில்லை என்­றும் கடந்த ஜூலை மாதம் 29ஆம் தேதி நடை­பெற்ற வழக்கு விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.

குற்­றச்­சாட்டை எதிர்­நோக்­கும் ஆட­வ­ரின் பெய­ரை­யும் அவர் பயின்ற பல்­க­லைக்­க­ழ­கத்­தின் பெய­ரை­யும் வெளி­யி­டக்­கூ­டாது என்று நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டது. பாதிக்­கப்­பட்ட பெண்­க­ளின் அடை­யா­ளத்­தைப் பாது­காக்க இந்த முடிவு எடுக்­கப்­பட்­ட­போ­தி­லும் ஆட­வ­ரின் பெயரை வெளி­யி­ட­வேண்­டும் என்று அப்­பெண்­கள் ஒரு­ம­ன­தாக விருப்­பம் தெரி­வித்­தி­ருப்­பதை அர­சாங்க வழக்­க­றி­ஞர் சுட்­டி­னார். எனவே அவ­ரது பெயரை வெளி­யிட நீதி­மன்­றம் அனு­ம­திக்க வேண்­டும் என்று அர­சாங்க வழக்­க­றி­ஞர்

கேட்­டுக்­கொண்­டார்.

ஆனால் அர­சாங்க வழக்­க­றி­ஞ­ரின் இந்த விண்­ணப்­பத்தை நிரா­க­ரிக்­கும்­படி குற்­றச்­சாட்டை எதிர்­நோக்கும் ஆட­வ­ரைப் பிர­தி­நி­திக்­கும் இன்­னொரு வழக்­க­றி­ஞ­ரான திரு அஷ்­வின் ஹரி­ஹ­ரன் நீதி­மன்­றத்­தைக் கேட்­டுக்­கொண்­டார். இதே போன்ற விண்­ணப்­பத்தை அர­சாங்க வழக்­க­றி­ஞர் முன்பு

தாக்­கல் செய்து அது நிரா­க­ரிக்­கப்­பட்­ட­தாக அவர் சொன்­னார்.

ஆட­வ­ரின் பெயரை வெளி­யிட விதிக்­கப்­பட்­டுள்ள தடை நீக்­கப்­

ப­டு­கிறது என்று நீதி­பதி கூறி­ய­தும் அது­கு­றித்து உயர்­ நீ­தி­மன்­றத்­தி­டம் மேல்­மு­றை­யீடு செய்­யப்­போ­வ­தாக தற்­காப்பு வழக்­க­றி­ஞர்­கள் தெரி­வித்­த­னர். இதற்­கி­டையே, பெயரை வெளி­யிட விதிக்­கப்­பட்ட தடை தொடர்­கிறது. பெண் குளிக்­கும்­போது அவ­ருக்­குத் தெரி­யா­மல் காணொளி எடுத்­தது, தமது வீட்­டின் கழி­வ­றை­யில் யாருக்­கும் தெரி­யா­மல் மறை­வான இடத்­தில் கேம­ரா­வைப் பொருத்­தி­யது, பெண்­

க­ளின் பாவாடை­க­ளுக்­குள் பட­மெ­டுத்­தது போன்ற குற்­றங்­களில் அந்த ஆட­வர் ஈடு­பட்­ட­தாகத் தெரி­விக்­கப்­பட்­டது.