50வது ஆண்டு ‘சிங்கே’ கொண்டாட்டம் உள்ளூர் கலைஞர்கள் பங்கேற்க வாய்ப்பு

சிங்­கப்­பூ­ரின் கலா­சா­ரத்தை அலங்­கார மித­வை­க­ளு­ட­னும் நட­னங்­ களு­ட­னும் வண்­ண­ம­ய­மாக பொது­மக்­க­ளுக்கு தீவு முழு­வ­தும் கொண்டு­ போய்ச் சேர்க்­கும் சிங்கே ஊர்­வ­லம், இம்­முறை 50வது ஆண்டு நிறை­வைக் கொண்­டா­டு­கிறது.

இந்­தக் கொண்­டாட்­டத்­தில் பங்­கேற்க உள்­ளூர் கலை­ஞர்­க­ளுக்கு பல்­வேறு போட்­டி­கள் அறி­விக்­கப்­பட்­டுள்­ளன.

நட­னக் கலை­ஞர்­க­ளுக்­கான போட்­டி­யில் பங்­கேற்க விரும்­பு­வோர் தங்­க­ளு­டைய நட­னங்­க­ளைக் காணொ­ளி­யா­கப் பதிவு செய்து www.chingay.gov.sg/D2 என்ற இணை­யப் பக்­கத்­தில் இம்­மா­தம் 15ஆம் தேதிக்­குள் பதிேவற்ற வேண்­டும். பதி­மூன்று முதல் 35 வயது வரை­யி­லா­ன­வர்­கள் இப்­போட்­டி­யில் பங்­கேற்­க­லாம். வெற்றியாளருக்கு 1,200 வெள்ளி வரை ரொக்­கப் பரிசு வழங்­கப்­ப­டும்.

சிங்கே ஊர்­வ­லத்­தின் 50வது ஆண்­டைக் குறிக்­கும் சிறப்பு நிகழ்ச்சி அடுத்த ஆண்டு பிப்­ர­வரி 12ஆம் தேதி நடை­பெ­று­கிறது.

கொவிட்-19 பாது­காப்பு நிர்­வாக நடை­மு­றை­கள் கார­ண­மாக நிகழ்ச்சி இணை­யம், சமூக ஊடங்­கள் வழி­யாக ஒளி­ப­ரப்­பப்­ப­டும்.

இவ்­வாண்­டின் சிறப்பு அம்­ச­மாக 'எங்­க­ளி­ட­மும் திற­னா­ளர்­கள் உண்டு' என்ற அங்­கம் இடம்­பெறு கிறது. இதில் கலந்­து­கொள்ள விரும்­பு­வோர் தங்­க­ளு­டைய திற­மை­க­ளைக் காட்­டும் ஒரு நிமிட காணொ­ளியை அனுப்­பி­வைக்க வேண்­டும். வெற்­றி­யா­ள­ருக்கு 3,000 வெள்ளி ரொக்­கப் பரிசு, பயிற்சி வாய்ப்பு மற்­றும் சிங்கே ஊர்­வ­லத்­தில் மேடை­யேற வாய்ப்­பும் வழங்­கப்­படும்.

பொது­மக்­களும் தங்­க­ளுக்­குப் பிடித்­த­மான காணொ­ளிக்கு இம்­மா­தம் 15ஆம் தேதி­யி­லி­ருந்து 30ஆம் தேதி வரை வாக்­க­ளிக்­க­லாம்.

புதிய அங்­கம் ஒன்று, 17 தொகு­தி­க­ளைச் சேர்ந்த குழு­வி­னர், சிங்கே ஊர்­வ­லக் காட்­சிக்கு சிறிய மித­வை­களை உரு­வாக்கி வழங்க வழி செய்­கிறது.

புகைப்­ப­டப் போட்டி ஒன்­றும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதில் சிங்கே ஊர்­வ­லம் பற்­றிய புகைப் படங்­களை அனுப்பி தங்­க­ளு­டைய நினை­வு­களை மக்­கள் பகிர்ந்­து­கொள்­ள­லாம். திரு­மதி ஓங் சூன் முய், 69, என்­ப­வர் சிங்கே ஊர்­வ­லத்­தில் தனது நண்­பர்­க­ளு­டன் நட­ன­மா­டிய 1973ஆம் ஆண்­டின் புைகப்­ப­டத்தை அனுப்­பி­யுள்­ளார்.

"சாலை­யின் இரு புறங்­களில் மக்­கள் நிரம்பி வழிந்­த­னர். எங்­க­ளு­டைய உற்­சா­கத்­துக்கு அள­வே­யில்லை," என்று ஓய்வு பெற்ற நட­ன­ம­ணி­யான திரு­மதி ஓங் கூறி­யுள்­ளார்.

அடுத்த ஆண்டு ஜன­வரி நடுப்­ப­கு­தி­யி­லி­ருந்து சிங்கே இணை­யத் தளத்­தில் பொது­மக்­களும் புகைப்­ப­டங்­களை பார்­வை­யிட முடி­யும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!