நடமாடச் சிரமப்படும், உடல்நலப் பிரச்சினை உள்ள வசதி குறைந்த மூத்தோருக்குத் தேவையான சாதனங்களை வாங்கவும் பழைய சாதனங்களுக்குப் பதிலாக புதிய சாதனங்களைப் பெறவும் கூடுதல் ஆதரவு வழங்கப்படுகிறது.
மின்சக்கரநாற்காலி, உயிர்வாயுக் கருவி போன்ற சாதனங்கள் பழுதடைந்தால் அவற்றுக்குப் பதிலாகப் புதிய சாதனங்களைப் பெற இத்திட்டம் கைகொடுக்கும்.
முத்தோருக்கும் உடற்குறை உள்ளவர்களுக்கும் இந்த ஆதரவை வழங்கும் நிதித் திட்டங்கள் விரிவுபடுத்தப்படும் என்று அங் மோ கியோவில் உள்ள Touchpoint@AMK433க்கு நேற்று சென்ற சுகாதாரத்துக்கான இரண்டாம் அமைச்சர் மசகோஸ்
ஸுல்கிஃப்லி தெரிவித்தார்.

