கண்ணாடி புட்டிகள், பயன்படுத்தப்பட்ட டிசு தாள்கள்: நீல மறுபயனீட்டுத் தொட்டியில் எவற்றைப் போடலாம்?

கண்ணாடி, தாள், பிளாஸ்டிக், உலோகம் ஆகியவற்றால் ஆன பொருள்களை எப்படி மறுபயனீடு செய்வது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

நீல மறுபயனீட்டுத் தொட்டிகளைச் சிங்கப்பூர் முழுவதும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். கண்ணாடி, தாள், பிளாஸ்டிக், உலோகம் ஆகியவற்றால் ஆன பொருட்களை இந்தத் தொட்டிகளில் போடலாம். ஆனால் இந்தத் தொட்டிகளில் எந்தெந்தப் பொருட்களைப் போடலாம் என்று துல்லியமாக உங்களுக்குத் தெரியுமா?

இல்லங்களில் எந்த அளவுக்கு மறுபயனீட்டுப் புழக்கம் உள்ளது என்பதைக் கண்டறியும் தேசிய சுற்றுப்புற அமைப்பின் அண்மைய ஆய்வு ஒன்றில் கிட்டத்தட்ட 2,300 குடியிருப்புகள் கலந்துகொண்டன. அவற்றில் 72 விழுக்காட்டினருக்கு அந்தத் தொட்டிகளில் போடும்முன்பு மறுபயனீட்டுப் பொருட்களைப் பிரிக்கத் தேவையில்லை என்பது தெரியவில்லை.

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் அனைத்து புதிய அரசாங்க வீடுகளில் குப்பை போடும் இரு குப்பைக் குழாய் தொட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன. வழக்கமான, ஈரமான குப்பைகளை ஒரு தொட்டியிலும் செய்தித்தாள்கள், கண்ணாடிப் புட்டிகள், உலோக டின்கள், பிளாஸ்டிக் பொருகள்கள் போன்ற சுத்தமான மறுபயனீடு செய்யக்கூடியப் பொருள்களை இன்னொரு தொட்டியிலும் போடலாம். மறுபயனீட்டுப் பொருள்களுக்கான மைய குழாய்த் தொட்டி எனும் இந்தத் தொட்டிகளில் சேகரிக்கப்படும் மறுபயனீட்டுப் பொருள்கள், மறுபயனீட்டுப் பொருள் மீட்புக் கூடத்தில் (materials recovery facility) பிரித்து எடுக்கப்படும்.

ஆய்வில் கலந்துகொண்டவர்களில் கணிசமானவர்களுக்கு மின்விளக்குகள், துணிகள், துணி பொம்மைகள், மெத்து (styrofoam) நீல வண்ண மறுபயனீட்டுத் தொட்டிகள் மூலம் பறுபயனீடு செய்ய முடியாது என்று தெரியவில்லை.

நீல மறுபயனீட்டுத் தொட்டியில் போடப்பட்டவற்றில் 40 விழுக்காடு பொருள்கள் மறுபயனீடு செய்ய முடியாதவை என்பதை தேசிய சுற்றுச்சூழல் அமைப்பு அண்மைய காலங்களில் கண்டது. அவை மறுபயனீடு செய்ய முடியாத பொருள்கள் அல்லது உணவு பானத்தால் மாசு ஆனவையாக இருந்தன.

மறுபயனீட்டைச் சரியாக செய்ய இதோ சில வழிமுறைகள்:

தாள்கள்

டிசு தாள்கள், முடித்த உணவுப் பொட்டலங்களை நீல மறுபயனீட்டுத் தொட்டிகளில் போடலாமா?

இல்லை. பயன்படுத்தப்பட்ட டிசு தாள்களைப் பொதுவான குப்பைத் தொட்டிகளில் போடவேண்டும். உங்கள் உணவுப் பொட்டலங்கள் எந்த அளவுக்கு அசுத்தமாக இருக்கின்றன என்பதைப் பொருத்து எந்த தொட்டியில் போடுவது என்பது நிர்ணயிக்கப்படும். உங்கள் பயன்படுத்தப்பட்ட உணவுப் பொட்டலம் பிளாஸ்டிக்கால் ஆனதாக இருந்தால் அவற்றை அலசி எந்த உணவும் ஒட்டி இருக்காமல் இருப்பதை உறுதி செய்துவிட்டு மறுபயனீடு செய்யலாம். பிஸா பெட்டிகள் போன்ற எண்ணெய் கறை அல்லது உணவு மீதம் இருந்தால் அவற்றைப் பொதுக் கழிவு குப்பைத் தொட்டியில் போடவேண்டும்.

குறிப்பு: உணவு பான கழிவுகள் பூச்சிகளை ஈர்க்கும். அவற்றைத் தவறுதலாக நீல மறுபயனீட்டுத் தொட்டிகளில் போட்டால் அவை மற்ற பொருள்களையும் மாசு படுத்திவிடும்.

பொதுக்கழிவுகள் மறுபயனீடு செய்யப்படுவதற்குப் பதில் எரிக்கப்பட்டு செமக்காவ் கழிவுநிலப்பரப்பில் போடப்படும். தற்போதைய சூழலில் சிங்கப்பூரில் ஒரே கழிவு நிலப்பரப்பு 2035க்குள் நிரம்பிவிடும்.

பிளாஸ்டிக் பொருள்கள்

‌‌‌ஷாம்பூ பாட்டில்களை வீசுவதற்கு முன்பாக அலசவேண்டுமா? இதனால் தண்ணீர் வீணாகாதா?

‌‌‌ஷாம்பூ பாட்டில்களை அலச நிறைய நீர் தேவைப்படாது. ‌‌‌‌‌ஷாம்பூ பாட்டில்களை அலசுவதுதான் மூலம் மற்ற மறுபயனீட்டுப் பொருள்களுடன் எந்த ரசாயனப் பொருள்களும் கலக்காமல் இருக்கும்.

மக்கும் தன்மையுடைய பிளாஸ்டிக் பொருள்கள் அல்லது எழுதுபொருள்கள்?

மக்கும் தன்மையுடைய பிளாஸ்டிக் பொருள்களின் தன்மை மாறுபட்டு இருப்பதால் அவை வழக்கமான மறுபயனீட்டு முறைக்கு உகந்ததல்ல. மேலும் பென்சில்கள் போன்ற எழுதுபொருள்களில் ரப்பர் போன்ற மற்ற பொருள்களில் கலந்திருப்பதால் அவை வழக்கமான மறுபயனீட்டுக்கு உகந்ததல்ல.

கண்ணாடி பொருள்கள்

என்னிடம் பல கண்ணாடிப் பொருள்கள் உள்ளன. அவற்றை என் வீவக மறுபயனீட்டு குழாய் தொட்டிகளில் போடலாமா?

ஆம். கண்ணாடியால் ஆன ஒயின் பாட்டில்கள், பீர் பாட்டில்கள், உணவுப்பொருள்கள் இருக்கும் கண்ணாடிகள் ஆகியவற்றை அலசிவிட்டு மறுபயனீட்டுத் தொட்டிக்குள் அல்லது குழாய்த் தொட்டிக்குள் போடலாம். பானம் இருக்கும் டின்களுக்கும் இதே வழிமுறைதான். அதிகமாக சுத்தம் செய்யவேண்டிய எண்ணெய் பாட்டில்களை வழக்கமான குப்பைத் தொடிகளில் போடலாம்.

கண்ணாடிப் பொருள்கள் உடையாமல் இருக்க அவற்றை மற்ற மறுபயனீட்டுப் பொருள்களுடன் ஒன்றாக ஒரு பையில் வைத்துப் போடலாம். அப்போது கண்ணாடி பாட்டில்கள் உடைந்தாலும் பைக்குள்ளேயே இருக்கும்.

உலோகப் பொருள்கள்

உலோக டின்களையும் மூடிகளையும் நீல மறுபயனீட்டுத் தொட்டிக்குள் போடலாமா?

ஆம். உலோகத்தால் ஆன பெரும்பான்மைப் பொருள்களை, உணவு, பானம் இருக்கும் டின்கள் உட்பட, மறுபயனீட்டுக்கு உகந்தவை. அவற்றை அலசிவிட்டு தொட்டிக்குள் போடுவதே சிறந்ததே.

மற்றவை

பழைய மரச்சாமான்கள், துணிமணிகள், பொம்மைகள், காலணிகள் போன்றவற்றை மறுபயனீடுத் தொட்டியில் போடலாமா?

இல்லை. இவற்றை நீல மறுபயனீட்டுத் தொட்டியிலோ குழாய்த் தொட்டியிலோ போடக்கூடாது.

அவை இன்னும் நல்ல நிலையில் இருந்தால் அவற்றை ரட்சன்ய ராணுவம் (Salvation Army) போன்ற நன்கொடை அமைப்புகளிடம் கொடுக்கலாம்.

மெத்தைகள், அலமாரிகள் போன்ற பெரிய பொருட்களை அப்புறப்படுத்த உங்கள் நகர் மன்றத்தை (Town Council) அழைக்கலாம். நீங்கள் வீவக வீட்டுல் வசிப்பவராக இருந்தால் இது போன்ற பெரிய பொருள்களை அப்புறப்படுத்தும் வசதி நகர மன்றத்தில் உள்ளது.

நீங்கள் தனியார் வீட்டில் வசிப்பவராக இருந்தால் உங்கள் வட்டரத்துக்குச் சேவையாறும் பொதுக் கழிவு அப்புறப்படுத்தும் நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளலாம். அல்லது உரிமம் பெற்ற கழிவுப் பொருள் அப்புறப்படுத்தும் முகவர்களின் தொடர்பை இந்த இணைப்பில் பெறலாம்.

மின்னியல் பொருள்களை மறுபயனீடு செய்யலாமா?

குளிர்சாதனப் பெட்டி, தொலைக்காட்சி போன்ற மின்னியல் சாதனங்களை நீல மறுபயனீட்டுத் தொட்டியில் போடக்கூடாது. இவற்றுக்கென பிரத்தியேக திட்டம் ஒன்று தேசிய சுற்றுச்சூழல் அமைப்பால் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி தொடங்கப்பட்டது.

இத்தகைய புதிய சாதனங்களை வாங்கும்போது, அவற்றை வீட்டுக்குக் கொண்டு வரும் நிறுவனம் பழைய மின் சாதனத்தை( உதாரணத்திற்கு புதிய தொலைக்காட்சி வாங்கி அதை நிறுவன ஊழியர் வீட்டுக்குக் கொண்டு வரும்போது பழைய தொலைக்காட்சியை இலவசமாக அவர் அகற்றும் சேவை நடப்பில் உள்ளது) இலவசமாக அகற்றும் சேவையையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

தேசிய மின்-கழிவு மறுபயனீட்டுத் திட்டத்தைப் பற்றியும் மறுபயனீட்டுக் குப்பைகளை அகற்றும் வழிகள், போடும் இடங்கள் குறித்தும் மேல் விவரங்களை தேசிய சுற்றுச்சூழல் அமைப்பின் இணையத்தளமான https://www.nea.gov.sg/ -இல் பெறலாம்.

பேட்டரி, கணினி போன்ற மின்-கழிவுகளை எங்கே போடுவது?

பேட்டரிகள், கணினிகள், கைத் தொலைபேசிபோன்ற மின்-கழிவுகளை நீலமறுபயனீட்டுத் தொட்டியிலோ அவற்றின் அருகிலோ போடக்கூடாது. அவற்றுக்கென பிரத்தியேக மின்-கழிவுத் தொட்டிகள் ஆங்காங்கே உள்ளன. அவற்றை அங்குதான் போடவேண்டும். இது குறித்த மேல் விவரங்களை இங்கே காணலாம்.

மறுபயனீடு என வரும்போது மறுபயனீடு செய்வது மட்டும் முக்கியம் அல்ல, முறையக மறுபயனீடு செய்வதும் முக்கியம். முறையான மறுபயனீடு பற்றிய மேல் விவரங்களை https://www.cgs.gov.sg/recycleright இணையதளத்தில் காணலாம்.

ஆதரவு

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!