மனிதவளப் போக்கு, உருமாற்றம் தொடர்பாக ஆய்வு

சிங்­கப்­பூ­ரின் ஹோட்­டல் துறை குறித்து ஆறு மாதங்­க­ளுக்கு ஆய்வு நடத்­தப்­பட இருக்­கிறது.

இவ்­வாண்­டின் முதல் காலாண்­டில் இந்த ஆய்வு தொடங்­கும்.

ஹோட்­டல் துறை­யின் வர்த்­தக அணு­கு­மு­றையை உரு­மாற்­றவும் புதிய வேலை­களை உரு­வாக்­க­வும் எதிர்­கா­லத்­துக்­காக ஹோட்­டல்­களை மறு­வ­டி­வ­மைக்­க­வும் இந்த ஆய்வு உத­வும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஆய்வை சிங்­கப்­பூர் பய­ணத்­

து­றைக் கழ­கம், மனி­த­வள அமைச்சு, சிங்­கப்­பூர் ஊழி­ய­ரணி அமைப்பு ஆகி­யவை நடத்­து­கின்­றன. 2025ஆம் ஆண்டு வரை ஹோட்­டல் துறை­யில் உள்ள முக்­கிய அம்­சங்­களை இந்த ஆய்வு அடை­யா­ளம் கண்டு மதிப்­பீடு செய்­யும்.

கொவிட்-19 நெருக்­க­டி­நி­லை­யால் பெரி­தும் பாதிக்­கப்­பட்­டுள்ள ஹோட்­டல் துறை இந்த ஆய்வை வர­வேற்­றுள்­ளது. ஹோட்­டல் துறை­யின் ஊழி­யர் பற்­றாக்­குறை நிலையை கொவிட்-19 சூழல் மோசமடையச் செய்துள்ளது.

ஹோட்­டல் துறை­யில் உரு­வாக்­கக்­கூ­டிய வேலை­கள் பற்­றி­யும் தேவை­யான திறன்­கள் குறித்­தும் ஆய்வு நடத்­தப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இடை­யூ­று­க­ளைச் சந்­திக்­கக்­

கூ­டிய வேலை­கள், அறவே இல்­லா­மல் போகக்­கூ­டிய வேலை­கள் ஆகி­ய­வற்றை ஆய்வு அடை­யா­ளம் கண்டு அவற்­றில் இருக்­கும் ஊழியர்

­க­ளின் திறன் மேம்­பாட்­டுக்கு பரிந்­து­ரை­களை முன்வைக்கும்.

ஆய்வு மூலம் முன்­வைக்­கப்­படும் பரிந்­து­ரை­க­ளைக் கொண்டு ஹோட்­டல் துறை­யில் மூன்று ஆண்­டு­கள் வேலை­கள் உரு­மாற்­றத் திட்­டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும்.

தள­வா­டம், மொத்த வியா­பா­ரம், கணக்­கி­யல் உட்­பட ஆறு துறை­

க­ளுக்­கான திட்­டங்­கள் ஏற்­கெ­னவே நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

ஹோட்­டல் துறை­யில் சுகா­தாரம் மற்­றும் நல்­வாழ்வு, நீடித்து நிலைத்­தி­ருக்­கும் பய­ணங்­கள், மின்­னி­லக்­கப் பொரு­ளி­யல் போன்ற புதிய அம்­சங்­கள் உரு­வாகி இருப்­பதை சிங்­கப்­பூர் பய­ணத்­து­றைக் கழ­கம் சுட்­டி­யது.

"ஆய்வு மூலம், இந்­தப் புதிய அம்­சங்­க­ளைப் பற்றி இன்­னும் ஆழ­மா­கப் புரிந்­து­கொள்­ளள நாங்­கள் விரும்­பு­கி­றோம்.

"இத்­த­கைய வாய்ப்­பு­க­ளைப் சிங்­கப்­பூர் ஹோட்­டல் துறை பயன்

­ப­டுத்­திக்­கொள்ள தேவை­யான அணு­கு­மு­றை­களை நடை­மு­றைப்­

ப­டுத்த இலக்கு கொண்­டுள்­ளோம்." என்று கழ­கம் கூறி­யது. மூன்று மனி­த­வள இலக்­கு­களை வழி­காட்டிகளாகக் ­கொண்டு ஆய்வு நடத்­தப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஹோட்­டல் துறை­யில் உள்­ளூர் ஊழி­யர்­க­ளின் விகி­தத்தை குறைந்­தது ஐந்து விழுக்­காடு உயர்த்­து­வது, ஹோட்­டல் துறை­யில் உள்ள அனைத்து வகை பணி­க­ளி­லும் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­குக் கூடு­தல்

சம்­பளம் வழங்­கும் வேலை­களை உரு­வாக்­கு­வது, கூடு­தல் உற்­பத்­தித்­தி­றன் கொண்ட, எதிர்­கா­லத்­துக்­குத் தயா­ராக இருக்­கும் ஊழி­ய­ர­ணியை உரு­வாக்­கு­வது ஆகி­யவை அந்த மூன்று மனி­த­வள இலக்­கு­கள்.

கொவிட்-19 நெருக்­க­டி­நிலை தொடங்­கி­ய­தி­லி­ருந்து ஹோட்­டல் துறை­யில் வேலைக்கு ஆட்­களை எடுப்­பது வெகு­வா­கக் குறைந்­துள்­ளது. கடந்த ஆண்டு செப்­டம்­பர் மாதம் ஹோட்­டல் துறை­யில் 24,700 ஊழி­யர்­கள் இருந்­த­னர்.

2019ஆம் ஆண்­டி­று­தி­யில் 36,300 பேரும் 2010ஆம் ஆண்­டில் 33,400 பேரும் ஹோட்­டல் துறை­யில் பணி­பு­ரிந்­த­னர்.

கொவிட்-19 நெருக்­க­டி­நிலை கார­ண­மாக சுற்­றுப்­ப­ய­ணி­க­ளின் வருகை பெரி­த­ள­வில் சரிவு கண்­ட­போது 2020ஆம் ஆண்­டில் மட்­டும் 710 ஹோட்­டல் துறை ஊழி­யர்­கள் ஆட்­கு­றைப்பு செய்­யப்­பட்­ட­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!