பணிப்பெண்ணின் முகத்தில் குத்தி எலும்பு முறிவை ஏற்படுத்திய சிங்கப்பூரரான 25 வயது சூரிய கிருஷ்ணனுக்கு ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மியன்மாரைச் சேர்ந்த அந்த 27 வயது மியன்மார் பணிப்பெண்ணுக்கு $8,500 இழப்பீட்டுத் தொகை வழங்கும்படி சூரியாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் தேதியன்று பணிப்பெண்ணைத் தாக்கியபோது சூரியா குடிபோதையில் இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.