தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கத்தியுடன் பாய்ந்த ஒருவரை பிடிக்க உதவிய மூவருக்கு பாராட்டு, விருது

2 mins read
4831e521-e7f9-4c0a-8551-bb10f382215b
-

பிப்ரவரி 17ஆம் தேதி கிளமெண்டி காவல் நிலையத்துக்கு போக வேண்டும் என்று கூறி தமது டாக்சியில் ஏறிய ஒருவர் கையில் கத்தி வைத்திருப்பதை கண்டார் டாக்சி ஓட்டுநர் கோ வி டெக்.

பின்னர் கிளமெண்டி அவென்யூ 5இல் உள்ள காவல் நிலையம் சென்றடைந்த டாக்சி ஓட்டுநர் நிலைய நுழைவாயிலில் இருந்த காவலரிடம் தமது பயணி கையில் கத்தியுடன் இருப்பதாகக் கூறினார்.

அப்பொழுது அவரை நோக்கி வந்த காவல் அதிகாரிகளைப் பார்த்து புரியாத மொழியில் அந்த நபர் உரக்கக் கத்தினார்.

காவல் துறை அதிகாரிகள் கத்தியை கீழே ேபாடச் சொன்னதை மதிக்காமலும் அவர்கள் விடுத்த எச்சரிக்கைகளை பொருட்படுத்தாமலும் அவர்களை நோக்கி கையில் கத்தியுடன் இருந்தவர் பாய்ந்து ஓடினார்.

அந்தப் பயணியின் செயல் உடனடி ஆபத்தை விளைவிக்கக்கூடியதாக இருந்ததால், காவல் துறை அதிகாரிகளில் ஒருவர் தமது கைத்துப்பாக்கியால் அந்த நபரை சுட்டதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

பின்னர், அந்த நபர் கைது செய்யப்பட்டார்.

அவர் சுயநினைவுடன் இருந்த நிலையில் அவரை காவல் துறையினர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

முன்னதாக, கிளமெண்டி அவென்யூ 1, புளோக் 420A அருகில் தாக்குதல் சம்பவம் ஒன்று நடந்ததாக தங்களுக்கு தகவல் கிைடத்ததாக காவல் துறை கூறியது. அத்துடன், வலது கையில் காயங்களுடன் 41 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

சந்தேக நபரால் தாக்கப்பட்ட 41 வயது ஆடவருக்கு முதலுதவி வழங்கியதற்காக திரு கோ வி டெக், அவருடன் மற்ற இருவர் என மூவருக்கு நேற்று, அவர்களுடைய பொறுப் புணர்ச்சிக்காக, விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.