ஆறு ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூர் வந்த பிலிப்பீன்ஸ் நாட்ட வரான திருவாட்டி லேயெஸ் ரோஸலின் கேரோவுக்கு முதியோர் பராமரிப்புத் துறையில் பணியாற்ற வேண்டும் என்பது ஆசை.
கொவிட்-19 சூழல் அவருக்குச் சாதமாக அமைந்தது. அதனைப் பயன்படுத்திக்கொண்ட அவர், முதியோர் பராமரிப்பில் பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்று உள்ளார்.
வீட்டில் உள்ள முதியோரைப் பராமரிக்கும் திட்டத்தில் பங்கேற்று பயிற்சியை முடித்த 300 இல்லப் பணிப்பெண்களில் 36 வயது லேயெசும் ஒருவர்.
ஃபாஸ்ட் என்று அழைக்கப்படும் சமூக ஆதரவு, பயிற்சிக்கான வெளிநாட்டு இல்லப் பணிப் பெண்கள் சங்கம் இந்தப் பயிற்சியை நடத்தியது.
"முதியோரைப் பராமரிப்பதற்கு எப்படி சான்றிதழ் பெறுவது என்பது ஆரம்பத்தில் தெரியவில்லை. ஆனால் இந்தத் திட்டத்தில் சேர ஃபாஸ்ட் வழிகாட்டியது," என்றார் லேயெஸ்.
"சிக்கலான சூழ்நிலையில் மூத்த குடிமக்களை எப்படி பராமரிப்பது என்பதை அனுபவமுள்ள பயிற்றுவிப்பாளர்கள் எங்களுக்குக் கற்றுக்கொடுத்தனர். நான் மிகவும் விரும்பி கற்றுக்கொண்டேன்," என்றார் அவர்.
திருவாட்டி லேயெஸ் சிங்கப்பூரில் வேலை செய்துகொண்டு தனது சம்பளத்தின் மூலம் பிலிப்பின்சில் உள்ள தனது பெற்றோருக்கும் உடன்பிறந்தவர்களுக்கும் ஆதரவாக இருந்து வருகிறார்.
ஃபாஸ்ட் நடத்திவரும் பயிற்சி வகுப்பை இன்று வரை 2,000க்கும் மேற்பட்டவர்கள் முடித்துள்ளனர். அது, 2005ஆம் ஆண்டிலிருந்து இல்லப் பணிப்பெண்களுக்கு முதியோர் பராமரிப்பில் பயிற்சி அளித்து வருகிறது.
சிங்கப்பூரில் மூன்று ஆண்டு களுக்கு மேல் பணியாற்றி வரும் இலங்கையைச் சேர்ந்த வர்னகுல சூர்ய மேரி கயானி ஃபெர்னாண்டோவும் இப்பயிற்சியை முடித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டு களாக தமது முதலாளியின் மூத்த குடும்ப உறுப்பினர்களை அவர் பராமரித்து வருகிறார். "நான் கற்றுக்கொண்ட திறன் எனக்கு மட்டுமல்லாமல் சமூகத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும்," என்று அவர் கூறி உள்ளார்.
ஃபாஸ்ட், 2025ஆம் ஆண்டுக்குள் முதியோர் பரா மரிப்பில் 10,000 இல்லப் பணிப் ெபண்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது.

