"சிங்கப்பூரின் முன்னணி பரதக்கலைஞர்களும் ஆசிரியர்களுமான திருமதி நீலா சத்தியலிங்கம், திருமதி சாந்தா பாஸ்கர் ஆகியோர் ஆண் கலைஞர்கள் முன்னேறுவதற்கு வாய்ப்பளித்தனர். இருப்பினும், ஆண் கலைஞர்கள் பலர் முழுநேரமாக நடனமாடாததால் இவ்வாய்ப்புகள் நிலைத்திருக்குமா என்ற கேள்வி எழுகிறது."
- திரு அரவிந்த் குமாரசாமி, அப்சராஸ் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் கலை இயக்குநர்
"ஆண்கள் ஆடக்கூடாது என்ற மனப்பான்மை இப்போது மாறி வந்தாலும் அவர்கள் ஆடுவது தகுந்த வரவேற்பை இன்னமும் பெறவில்லை என்று நினைக்கிறேன். சிலர் இதற்கான முயற்சியை மேற்கொண்டாலும் பாலினம் காரணத்தால் அவர்களுக்கு இப்போதும் தடங்கல் உள்ளது."
- திரு க. செல்வாநந்தன்
'அவான்ட் தியேட்டர்' நாடக நிறுவன இயக்குநர்
"நான் நடனம் கற்றுக்கொண்ட காலகட்டத்திலும் 'பரதாஞ்சலி' நடனப்பள்ளியைத் தொடங்கியபோதும் எனக்கு ஆதரவு அதிகம் கிடைக்கவில்லை. 1970, 1980களில் ஆண்கள் ஆடக்கூடாது என்ற மனப்பான்மை இருந்தது. ஆனால், இப்போது அந்த மனப்பான்மை மாறிவருகிறது. யார் வேண்டுமானாலும் ஆடக் கற்றுக்கொள்ளலாம்."
- திரு வீரப்பன் பாலகிருஷ்ணன்
பரதாஞ்சலி நடனப்பள்ளி நிறுவனர்
"கலை என்பதில் ஆண், பெண் என்ற வேறுபாட்டை பார்க்கக்கூடாது. மேடையில் நடனமாடுபவர்களின் பாலினத்தைக் கவனிக்காமல் அவர்கள் சித்திரிக்கும் கதாபாத்திரங்களையும் கதையையும்தான் பார்வையாளர்கள் கவனிக்கவேண்டும்."
- திரு மோகனப்பிரியன் தவராஜா, அப்சராஸ் ஆர்ட்ஸ் நிறுவன கலைஞர், நடன இயக்குநர்

