தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மூன்று நகர மன்றங்களில் சேவை, பராமரிப்புக் கட்டண பாக்கி

2 mins read
e0d85945-b10e-4795-b8d1-7a505020c7ae
-

தேசிய வளர்ச்சி அமைச்சு நேற்று வெளி­யிட்ட நகர மன்­றங்­க­ளின் நிர்­வாக அறிக்­கை­யில், மூன்று நகர மன்­றங்­கள் சேவை, பரா­ம­ரிப்­புக் கட்­டண பாக்­கி­யால் ஆரஞ்­சுக் குறி­யீட்­டைப் பெற்­றுள்­ளன.

சுவா சு காங் நகர மன்­றம், ஜுரோங்-கிள­மெண்டி நகர மன்­றம், செங்­காங் நகர மன்­றம் ஆகி­யவை இவை. எஞ்­சிய 14 நகர மன்­றங்­களும் பச்­சைக் குறி­யீட்­டைப் பெற்­றுள்­ளன.

பச்­சைக் குறி­யீடு நகர மன்­றம் சிறப்­பா­கச் செயல்­ப­டு­வ­தை­யும் ஆரஞ்­சுக் குறி­யீடு நிர்­வா­கம் திருப்­தி­யான வகை­யில் இல்லை என்­ப­தை­யும் சிவப்­புக் குறி­யீடு மோச­மான நிர்­வா­கத்­தை­யும் குறிக்­கும்.

ஆரஞ்­சுக் குறி­யீடு வழங்­கப்­பட்ட நகர மன்­றங்­களில் 40 முதல் 60க்கும் குறை­வான விழுக்­காட்­டுக் குடும்­பங்­கள், மூன்று அல்­லது அதற்­கும் அதி­க­மான மாதங்­களுக்கு உரிய மாதாந்­தர சேவை, பரா­ம­ரிப்­புக் கட்­ட­ணத்­தைச் செலுத்­த­வில்லை. மற்ற 14 நகர மன்­றங்­களில் இந்த விழுக்­காடு இதற்­கும் குறை­வா­கவே பதி­வா­கி­யுள்­ளது.

நான்கு அம்­சங்­க­ளின் அடிப்­படை­யில் நகர மன்­றங்­களில் செய­லாக்­கம் மதிப்­பி­டப்­ப­டு­கிறது.

குடி­யி­ருப்­புப் பேட்­டை­யின் தூய்மை, அதன் நிர்­வா­கம், மின்­தூக்­கிச் செயல்­பாடு, சேவை, பரா­ம­ரிப்­புக் கட்­டண நிர்­வா­கம் ஆகி­யவை இவை.

குடி­யி­ருப்­புப் பேட்­டை­யின் தூய்மை, அதன் நிர்­வா­கம், மின்­தூக்­கிச் செயல்­பாடு ஆகிய மூன்று அம்­சங்­களில் அனைத்து 17 நகர மன்­றங்­க­ளுமே பச்­சைக் குறி­யீடு பெற்­றுள்­ளன.

நகர மன்­றங்­களும் அவற்­றின் கணக்­குத் தணிக்­கை­யா­ளர்­களும் சமர்ப்­பிக்­கும் விவ­ரங்­க­ளின் அடிப்­படை­யில் இந்­தக் குறி­யீ­டு­கள் வழங்­கப்­ப­டு­கின்­றன.

இந்த ஆண்­டி­லி­ருந்து நகர மன்ற நிர்­வாக அறிக்கை இரண்டு பகு­தி­க­ளாக வெளி­யி­டப்­ப­டு­கிறது.

இந்த நான்கு அம்­சங்­க­ளின் அடிப்­ப­டை­யி­லான குறி­யீ­டு­கள் முதல் பகு­தி­யி­லும், நிதி நிலை அறிக்­கை­யின் அடிப்­ப­டை­யி­லான மதிப்­பீடு நவம்­பர் அல்­லது டிசம்­ப­ரில் வெளி­யி­டப்­படும் இரண்­டாம் பகு­தி­யி­லும் இடம்­பெற்­றி­ருக்­கும்.

நகர மன்றங்கள் நிதி நிலை அறிக்­கை­யை செப்­டம்­பர் மாதத்­தில்­தான் தேசிய வளர்ச்சி அமைச்சிடம் சமர்ப்பிக்கும் என்­ப­தால் இரண்­டாம் பகுதி நவம்­பர் அல்­லது டிசம்­ப­ரில் வெளி­யா­கும்.

இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருப்பதால் நகர மன்றங்களின் மதிப்பீடு முறையில் மாற்றம் ஏதுமில்லை என்று தேசிய வளர்ச்சி அமைச்சு தெரிவித்தது.