சைனாடவுனில் உள்ள பீப்பிள்ஸ் பார்க் செண்டர் கட்டடம் பொது ஏலம் வழி $1.8 பில்லியனுக்கு ஒட்டுமொத்த விற்பனைக்கு வந்தது.
இது சதுர அடிக்கு $2,620 எனும் விலைக்கு ஒப்பானது என்று கட்டடத்தைச் சந்தைப்படுத்தும் ஈஆர்ஏ சொத்துச் சந்தை நிறுவனம் கூறியது.
$1.8 பில்லியனில் நிலத்துக்கான குத்தகைக்காலத்தை 99 ஆண்டுகளாகப் புதுப்பிக்கத் தேவையான கட்டணமும் அடங்கும்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பீப்பிள்ஸ் பார்க் செண்டர் கட்டடத்தை விற்க முயற்சி நடைபெற்றது.
அப்போது $1.35 பில்லியன் எனும் விலைக்கு நிர்ணயிக்கப்பட்டது.
1970ல் கட்டப்பட்ட பீப்பிள்ஸ் பார்க் செண்டர் கட்டடம், 95,467 பரப்பளவு கொண்டது.

