நிலையற்ற உலகில் மூப்படையும் இந்திய சமூகம்; வளத்துக்கு நலனும் நிதித்திறனும் அவசியம்

ஈராண்­டு­க­ளுக்கு முன்னர்­, வாழ்க்கை சாத்­தி­யங்­களும் வாய்ப்­பு­களும் நிறைந்த, ஒளி­மிக்கதாக இருந்­தது.

ஈராண்­டு­க­ளுக்­குப் பின்­னர் துளிர்­விட்ட நம்­பிக்கை, போர், அரசியல் குழப்பம், பொருளியல் சிக்கல்கள், பிணி, புயல், வெள்­ளம், பஞ்­சம், விண்ணை முட்­டும் விலை­வாசி எல்லாவற்­றா­லும் ஆட்­டம் கண்­டுள்­ளது.

நாட்­டை­யும் நம்­மை­யும் சூழ்ந்­துள்ள அபா­யங்­களை சிங்­கப்­பூர் தலை­வர்­கள் எப்­போ­துமே நினை­வூட்டி வந்­த­போ­தும் என்­று­மில்­லாத அள­வுக்கு இன்று அதை மிக அதி­க­மாக உணர்ந்­துள்­ளோம்.

இவ்­வே­ளை­யில்­தான் ஒரு சமூ­க­மாக நாம் மூப்­ப­டைந்து வருவது இன்­னும் பெரிய சவா­லாகத் தோன்றுகிறது. நம்மை எட்­டாத தொலை­வில் இல்லை இச்சமூகச் சவால். ஒவ்­வொரு வினா­டி­யும் மூப்பை நோக்கி நகர்ந்து கொண்­டி­ருக்­கி­றோம்.

சிங்­கப்­பூ­ரில் தற்­போது ஆண்­க­ளின் எதிர்­பார்க்­கப்­பட்ட ஆயுள் காலம் 81 வயது. பெண்­க­ளுக்கு அது 85 வயது. ஆயுள் நீள்­வ­தால், சிங்­கப்­பூர், ஓய்வுபெறும் வயதைத் தள்ளி வைத்­துக்கொண்­டி­ருக்­கிறது. முது­மை­யில் ஓய்ந்த காலம் போய் வேகம் எடுக்­கும் காலம் வந்­து­விட்­டது.

ஆனால் இதி­லும் சவால் உள்­ளது. 2030க்குள் சிங்­கப்­பூ­ரர்­களில் நால்­வ­ரில் ஒரு­வர், 65 வய­துக்­கும் மேற்­பட்­ட­வ­ராக இருப்­பார் என்­றும் அவ­ரின் அந்­தி­ம­காலப் பத்­தாண்­டு­கள் உடல்­நிலை குன்றி இருக்­கும் என்­றும் புள்­ளி­வி­வ­ரம் கூறு­கிறது.

அர­சாங்­கம் மூப்­ப­டை­த­லைத் தள்­ளிப்­போட்டு நோயைக் குறைத்து, நல­மிக்க ஆண்­டு­களை அதி­க­ரிப்­ப­தில் கூடு­தல் முத­லீடு செய்து வரு­கிறது. உதா­ர­ணத்­துக்கு நல­மிக்க நீண்ட ஆயுள் காலத்­துக்­கான வழி­களை ஆய்வு செய்ய நிலை­யம் ஒன்று தொடங்­கப்­பட்­டுள்­ளது.

இந்­திய சமூ­கத்­தி­ன­ரும் இவற்­றைப் பற்றி அக்­க­றை­கொள்ள வேண்­டும்.

2021ல் இந்­தி­யர்களான சிங்­கப்­பூர் குடி­மக்­களில் 34,889 பேர், 65 வய­துக்­கும் மேற்­பட்­ட­வர்­கள்.

அதே 2021ல், 55 வய­துக்­கும் 59 வய­துக்­கும் இடையே 20,736 சிங்கப்பூர் இந்­தி­யர்களும் (குடி­மக்க­ள்) 60 வயதுக்கும் 64 வய­துக்கு இடையே 18,867 இந்தியர் களும் (குடிமக்கள்) இருந்­த­னர். இவை புள்ளிவிவரத் துறை தரவுகள் ஆகும்.

உத்­தேச மரண எண்ணிக்கையை கருத்­தில் கொண்­டால் 2030ல் 65 வயதுக்­கும் மேற்­பட்ட சிங்கப்பூர் இந்திய குடிமக்க ளின் எண்ணிக்கை பல்லாயிரம் உயரலாம்.

சிங்­கப்­பூர் மருத்­துவ ஆய்­வி­த­ழில் 2019ல் சிங்­கப்­பூர் முதி­ய­வர்­க­ளின் நலம் எனும் நாடு தழு­விய ஆய்­வின் முடி­வு­கள் வெளி­யி­டப்­பட்­டன. 60 வய­துக்கு மேற்­பட்ட சீனர்­க­ளை­விட இந்­தியர்­க­ளுக்­கும் மலாய்க்­கா­ரர்­க­ளுக்­கும் வள­மான மூப்­ப­டை­த­லு­டன் தொடர்­பி­ருக்­கும் சாத்­தி­யம் குறைவு என்று அந்த ஆய்வு கூறி­யது.

நீரி­ழிவு நோய், உயர் ரத்த அழுத்­தம், உயர் ரத்­தக் கொழுப்பு எனும் முப்­பி­ணி­களில் இந்­தி­யச் சமூ­கம் சிக்­குண்டு உள்­ளது என்­ப­தும் நமக்­குத் தெரி­யும்.

முடங்­க­வைக்­கும் நோய் அபா­யம், மன அழுத்­தம், முது­மைப் பேரலை ஆகி­ய­வற்­றின் பாதிப்­பு­களைக் குறைக்­க­வும் தள்ளிப் போட­வும் ஐந்­தி­லேயே வளைய வேண்­டிய கட்­டா­யத்­தில் சமூ­கம் உள்­ளது. நாம் முது­மைக்கு உடல், மனம், நிதி அள­வில் தயா­ரா­க வேண்­டும் என்று உறைக்­கிறது.

இதில் நான்கு அம்­சங்­கள் உள்­ளன. முத­லா­வது உடல்­ந­ல­மும் மன­ந­ல­மும்.

வரும்­முன் காக்­க­வும் வந்­த­தைக் கட்­டுக்­குள் வைத்­தி­ருக்­க­வும் முயல்­வது முக்­கி­யம். அர­சாங்­கத்­தின் பொதுத் தொடர்பு முயற்­சி­கள், ஊட­கங்­கள் ஆகி­ய­வற்­றின் வழி­யா­க­வும் நமது சொந்த அக்­கறை யாலும் உடல்­ந­லம் காப்­பது பற்­றிய விழிப்­பு­ணர்வு சமூ­கத்­தில் கூடி­யுள்­ளது.

அதி­க­மான இந்­தி­யர்­கள் உடற்­ப­யிற்சி­யி­லும் விளை­யாட்­டு­க­ளி­லும் ஈடு­ப­டு­கின்­ற­னர். குழு­வாக ஓடு­கின்­ற­னர், நடக்­கின்­ற­னர். நானும் முயல்­கி­றேன்.

சிலர் சுகா­தார அமைச்­சின் 'ஹெல்தி 365' செய­லி­யைப் பயன்­ப­டுத்தி நடப்­ப­துடன் என்­டி­யுசி பற்­றுச்­சீட்­டு­கள் போன்ற அனு­கூ­லங்­க­ளைப் பெறு­கின்­ற­னர். இதை இன்­னும் பலர் பயன்­ப­டுத்த வேண்­டும்.

வருங்­கா­லத்­தில் இந்­தி­யர்­க­ளின் குறிப்­பாக மூப்­ப­டைவோரின் மன­ந­லன் குறித்த பல சமூக முயற்­சி­கள் எடுக்­கப்­படும் என்று எதிர்­பார்க்­க­லாம். நாமும் மன­ந­லன் பற்றி தயங்­கா­மல் ஆக்­க­க­ர­மா­க­வும் பேச­வும் முன்­மு­டி­வு­கள் இல்­லா­மல் காது­கொ­டுத்து கேட்­க­வும் கற்­றுக்­கொள்­வது முக்­கி­யம்.

உடல்­ந­ல­னும் மன­ந­ல­னும் காத்­தால்­தான் முது­மை­யில் தொடர்ந்து இயங்கி துடிப்­பும் நம்­பிக்­கை­யும் மிக்க, அனு­கூ­ல­மான சமூக அங்­கத்­தி­ன­ராக முடி­யும்.

இங்கே தமிழ் முர­சைக் குறிப்­பிட்­டாக வேண்­டும். புதிய பல இளை­யர்­க­ளு­டன் எண்­பது வயது திரு நட­ராசன் இன்­றும் தமிழ் முர­சில் சேவை­யாற்­று­கி­றார். திரு கிருஷ்­ண­னும் திரு ருஷ்­யேந்­தி­ர­னும் மேலும் பல­ரும் எங்­கள் களஞ்­சி­யங்­கள்.

என் எல்லா பணியிடங்களிலும் தலை­சி­றந்த, அனு­ப­வம் வாய்ந்த கனி­வான ஆசான்­கள் கிடைத்­த­னர். தட்­டிக்­கொ­டுத்­தும் தட்­டிக்கேட்­டும் போட்­டி­போட்டு வேலை செய்­தும் நம்­மைச் செம்­மைப் படுத்­தும் மூத்த ஊழி­யர்­கள், நம் நலம் விரும்­பும் பெரு­மக்­கள்.

இவர்­க­ளைப்போல நாம் நமது துறை­களில் நல்ல சக ஊழி­ய­ரா­க­வும் வழி­காட்­டி­யா­க­வும் இருந்­தால் முது­மை­யில் பணி பய­னும் மகிழ்ச்­சி­யும் மிக்­க­தாக இருக்­கும். அதிலும், தேங்காமல் நம்­மைப் புதுப்­பித்துக் கொள்ள திறன்­பயிற்சி, தொடர்கல்வியைக் கைக்கொள்ள வேண்டும்.

நல­மிக்க முது­மைக்­கும் திட்­ட­மி­டு­வ­தில் இன்­னொன்­றும் பங்கு வகிக்­கிறது. அது­தான் நம் நிதி இருப்­பும் சேமிப்­பும்.

விருப்­பத்­தின்­பே­ரில் வேலை செய்­ய­வும் விரும்­பிய மற்­ற­வற்­றைச் செய்­ய­வும் பணம் கையில் வேண்­டும்.

சேமிப்பு, காப்­பு­றுதி, பங்கு முத­லீடு என்று இன்று நிதி திட்டமிடலுக்குப் பற்­பல வழி­கள் உள்­ளன. முத­லில் மத்­திய சேம­நி­தியை நாம் முழு­மை­யா­க­வும் விவே­க­மா­க­வும் பயன்­ப­டுத்­திக்கொள்­ள­லாம்.

மேற்கண்ட அனைத்திலும் அர­சாங்­க­மும் சமூ­க­மும் நடத்தும் நிகழ்ச்­சி­கள், பயி­ல­ரங்­கு­கள், வகுப்­பு­கள், எண்­ணற்ற இணை­யத்­த­ளங்­கள், செய­லி­கள் என பல வளங்­கள் உண்டு.

இது ஏதும் நமக்­குத் தெரி­யா­ததல்ல.இது ஒரு நினை­வூட்­டல் மட்டுமே. நாம் செய்­ய­வேண்­டி­யது சுணங்­கா­மல் வாய்ப்பு களையும் வளங்களையும் பயன்­ப­டுத்­திக் கொள்­வதும் நம்மை ஈடுபடுத்திக்கொள் வதும்தான். இந்த வளங்களைப் பயன்­ படுத்தி நான்கு அம்சங்களிலும் திட்­டமிட்டு செயல்பட்டால்தான் நிலை­யற்ற சூழலில் ஒரு சமூ­க­மாக நீர்த்துப் போகா­மல் நம்மை நிலை­நி­றுத்திக்கொள்ள முடி­யும்.

இதைச் செய்தால், பல சவால்கள் இருப்பினும் வள­மான எதிர்­கா­லத்­துக்­கான எல்லா சாத்­தி­யங்­களையும் அடையலாம். நம்­பிக்கை கொள்­வோம். ஈடுபடுவோம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!