இளையர்களிடையே புத்தாக்கம், உற்சாகத்தை ஊக்குவித்த குழுக் கலந்துரையாடல்

புத்­தாக்க முறை­யில் சிந்­தித்து, ஏதே­னும் வியா­பா­ரம் தொடங்க வேண்­டும், சமூக ஊட­கத்­தில் முத்­திரை பதிக்க வேண்­டும் போன்ற எண்­ணங்­கள் கொண்ட இளை­யர்­க­ளுக்கு, எவ்­வாறு அவற்­றைச் செயல்­ப­டுத்­து­வது என்று தெரி­யா­மல் இருக்­க­லாம். இதற்கு தமி­ழர் பேர­வை­யின் இளை­யர் பிரிவு ஏற்­பாடு செய்­தி­ருந்த 'டி டாக்­கீஸ்' என்­னும் கலந்­து­ரை­யா­டல் நிகழ்ச்சி கைகொ­டுத்­தி­ருந்­தது.

புகைப்­ப­டம் எடுத்­தல், புத்­தாக்க இயக்­கம், இசை, ஆடை, சிகை மற்­றும் ஒப்­பனை அலங்­கா­ரம் ஆகிய துறை­க­ளைச் சேர்ந்த நிபு­ணர்­கள் இளை­யர்­க­ளுக்கு அவர்­

க­ளு­டைய வாழ்க்கை அனு­ப­வங்­க­ளைப் பற்­றி­யும் தாங்­கள் கற்­றுக்­கொண்ட பாடங்­க­ள் பற்­றி­யும் பகிர்ந்து­கொள்ள ஒரு தள­மாக இந்­தக் கலந்­து­ரை­யா­டல் அமைந்­தது. தேசிய நூலக வாரி­யத்­தின் ஐந்­தாம் தளத்­தில் உள்ள இமா­ஜி­னே­ஷன் அறை­யில் கடந்த மாதம் 24ஆம் தேதி­யன்று முப்­ப­துக்­கும் மேற்­பட்ட இளை­யர்­கள் கூடி­னர். நான்­கு குழுக்­க­ளா­கப் பிரிக்­கப்­பட்டு, தங்­க­ளுக்கு ஆர்­வ­முள்ள பிரி­வு­களில் உள்­ள­வர்­க­ளி­டம் அத்­து­றை­யைப் பற்­றிய தங்­க­ளின் கேள்­வி­களை முன்­வைத்­துத் தக­வல் அறிந்­த­னர்.

"புகைப்­ப­டம் எடுத்­தல், புத்­தாக்க இயக்­கம், இசை, ஆடை, சிகை மற்­றும் ஒப்­பனை அலங்­கா­ரம் ஆகிய துறை­களில் கால் பாதிக்க விரும்­பும் இளை­யர்­க­­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­வதை நாங்­கள் கவ­னித்­தோம். இத்­து­றை­கள் மூல­மாக தங்­கள் திற­மை­யை வளர்த்­துக்­கொள்ள விரும்­பும் இளை­யர்­களை ஊக்­கு­விக்­கும் வகை­யில் இந்த கலந்­து­ரை­யா­டலை நடத்­தி­னோம்," என்று 'டி டாக்­கீஸ்' கலந்­து­ரை­யா­ட­லின் திட்ட இயக்­கு­நர் அந்­தோணி ஹாஷ்­வின் கூறி­னார்.

புகைப்­ப­டத் துறை, ஆடை, சிகை மற்­றும் ஒப்­பனை அலங்­கா­ரத் துறை, இசைத் துறை, புத்­தாக்­கத் திட்­ட­மி­டல் துறை என நான்கு துறை­களில் ஒவ்­வொரு துறை­யை­யும் பிர­தி­நி­தித்து, அர­விந்த்­கு­மார், கேச­வன் உடை­யப்­பன், சத்யா நல்­லையா, காமினி சுப்­பிர­ம­ணி­யம் ஆகிய நால்­வ­ரும் கலந்­து­ரை­யா­ட­லில் நிபு­ணர்­க­ளாக கலந்­து­கொண்­ட­னர்.

தன்­னம்­பிக்கை, விடா­மு­யற்சி

தன்­னம்­பிக்­கையை வளர்த்­துக்­கொள்­ளு­தல், முயற்­சி­யெ­டுத்­தல் ஆகி­ய­வையே வெற்­றிக்­கான முதல் படி­கள் என்று வலி­யு­றுத்­தி­னார் இசை நிபு­ணர் சத்யா நல்­லையா.

"நம்­மீது நமக்கு நம்­பிக்கை இருக்க வேண்­டும். இசைக்கு வரை­ய­றை­கள் கிடை­யாது, ஆனால் நிலைத்­தன்மை முக்­கி­யப் பங்­க­ளிக்­கிறது. இசை­யில் ஆர்­வ­முள்ள இளை­யர்­கள் அந்த முதல் படியை எடுத்­து­வைக்க வேண்­டும், நுட்­பங்­க­ளைக் கற்­றுக்­கொண்டு முன்­னேற, தொடர்ந்து நல்ல இசையை உரு­வாக்க முயல வேண்­டும்," என்று கூறுகிறார் சத்யா.

ஆற்­றலை அறிந்­தி­ருத்­தல்

நம் திறன்­களை வளர்த்­துக்­கொள்ள பல்­வேறு வழி­கள், ஊட­கங்­கள் இருக்­கும் வேளை­யில், நம்­மைத் தனித்­துக் காட்­டு­வது என்ன என்­பதை அடை­யா­ளம் கண்டு, அதை ஓர் அடித்­த­ள­

மா­கக்­கொண்டு செயல்­ப­டு­வதே அவ­சி­யம் என்­றார் புகைப்­ப­டத் துறை நிபு­ணர் அர­விந்த்­கு­மார்.

"நம்­மால் என்ன முடி­யும், முடி­யாது என்­பதை அடை­யா­ளம் காண வேண்­டும். புகைப்­ப­டத் துறை­யில் சாதித்­த­வர் பலர், ஆகை­யால் இதை முழு­நேர வேலை­யா­கச் செய்ய விரும்­பி­னால் விடா­மு­யற்சி இருப்­பது மிக முக்­கி­யம். ரசி­கர்­களின் விருப்­பங்­களை அறிந்­து­கொள்­வ­து­டன் நம் சிறப்­பு­களை அறிந்து அவற்­றில் கூடு­தல் கவ­னம் செலுத்து­வ­தன் மூலம் நம்மை மேம்­

ப­டுத்­திக்­கொள்­வது அவ­சி­யம்," என்று கூறுகிறார் வின்­சே­னிட்டி (Vindsanity) நிறு­வ­னத்­தின் தலைமை நிர்­வாக அதி­கா­ரி­யு­மான அர­விந்த்­கு­மார்.

லட்­சி­யத்­தில் தெளிவு

தனித்­து­வ­மிக்க படைப்­பு­க­ளைப் புத்­தாக்க முறை­யில் எவ்­வாறு படைக்­க­லாம் என்­ப­தைப் பற்றி பேசிய முழு­நேர ஆசி­ரி­யர் காமினி சுப்பி­ர­ம­ணி­யம், முழு­நேர வேலை ஒன்­றில் இருந்­து­கொண்டே ஒரு தெளி­வான இலக்­கும் ஆசை­யும் இருந்­தால் எது­வும் சாத்­தி­யம் என்று குறிப்­பிடுகிறார். நேரத்தை எப்­படி ஆக்­க­பூர்­வ­மான முறை­யில் வகுக்­க­லாம் என்­பது குறித்­தும் பகிர்ந்­து­கொண்­டார்.

வலு­வான வாடிக்­கை­யா­ளர் ஆத­ரவு

பகுத்­த­றி­வு­டன் இலக்­கு­களை அமைத்­துக்­கொள்­வது ஒரு முக்­கிய அம்­சம் என்று கூறுகிறார்

கேச­வன் உடை­யப்­பன். ஆடை, சிகை மற்­றும் ஒப்­பனை அலங்­

கா­ரத் துறை­யில் ஒரு­வர் வளர்ச்சி காண பொறு­மை­யும் பயிற்­சி­யும் அத்­தி­யா­வ­சி­யம் என்­றும் இவர் கூறுகிறார். புகழ்­பெற்ற நட்­சத்­தி­ரங்­க­ளுக்கு ஒப்­ப­னை­யா­ள­ரா­கப் பணி­பு­ரிந்­து­வ­ரும் இவர், வலு­வா­ன­தொரு வாடிக்­கை­யா­ளர் வட்­டத்­தைக் கொண்­டி­ருப்­பது முக்­கி­யம் என்று கரு­து­கி­றார்.

நான்­கு துறை­க­ளி­லும் ஆர்­வ­முள்ள இளை­யர்­க­ளுக்­குத் தங்­க­ளின் சந்­தே­கங்­க­ளைக் கேட்­டுத் தெளி­வ­தற்­கும் ஆலோ­சனை பெறு­வ­தற்­கும் இது சிறந்­த­தோர் ஒன்­று­கூ­டல் தள­மாக அமைந்­தி­ருந்­தது.

"சமூக ஊட­கத் தளங்­க­ளுக்­காக முக்­கி­யத் தக­வல்­க­ளை­யும் சிறந்த குறும்­ப­டங்­க­ளை­யும் தயா­ரித்து வழங்­க­வேண்­டும் என்­பது என் விருப்­பம். அந்த விருப்­பத்தை எவ்­வாறு சிறந்த முறை­யில் செயல்­

ப­டுத்­த­லாம் என்­பதை அறிந்­திட இந்த நிகழ்ச்சி எனக்கு வாய்ப்­ப­ளித்­துள்­ளது," என்று கூறி­னார் கலந்­து­ரை­யா­ட­லில் பங்­கேற்ற பல­து­றைத் தொழில்­நுட்­பக் கல்­லூரி மாணவி சஹானா ராஜு.

வந்­தி­ருந்த இளை­யர்­க­ளுக்­கும் நான்­கு துறை­க­ளைச் சார்ந்த நிபு­ணர்­க­ளுக்­கும் இடையே இலக்­கு­

க­ளைப் பற்­றிய தர­மான ஒரு பகிர்வு நிக­ழும் வண்­ணம் பாது­காப்­பான ஒரு சூழலை அமைத்­துக்­கொ­டுத்­த­தில் தான் பெரு­மி­தம் கொள்­வ­தாக தெரி­வித்­தார் தமி­ழர் பேர­வை­யின் இளை­யர் பிரிவு தலைவி ஷெரீன் பேகம்.

இதுபோன்ற கலந்­து­ரை­யா­டல் மூலம் இளை­யர்­க­ளால் தங்­க­ளு­டன் ஒத்த சிந்­த­னை­யு­டைய மற்­ற­வர்­க­ளைச் சந்­திக்க முடி­கிறது, விருப்­ப­மான துறை­யில் தங்­களை மேம்

­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும் என்ற உற்­சா­கத்­தை­யும் தரு­கிறது.

செய்தி: காயத்­திரி காந்தி

படங்­கள்: திமத்தி டேவிட்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!