தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

1,800க்கும் மேற்பட்ட வசதி குறைந்த குடும்பங்களுக்கு குட்டி நூலகங்கள்

1 mins read
6c16c019-af67-422e-8d4e-ef01f542ad51
-

சிறார்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க 1,800க்கும் மேற்பட்ட வசதி குறைந்த குடும்பங்கள் குட்டி நூலகங்களைப் பெற்றுள்ளனர்.

ஒவ்வொர்ர் குடும்பத்துக்கும் ஒரு பேழை நிறைய புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குடும்பத்தையும் சேர்ந்த குழந்தைகளில் வயதுக்கு ஏற்ப புத்தகங்கள் இருக்கும்.

கிட்ஸ்டார்ட் ஸ்டோரீஸ்(KidStart Stories) எனும் இத்திட்டத்தை சமூக, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சுன் சுவெலிங் சுவா சு காங்கில் உள்ள கீட் ஹொங் சமூக மன்றத்தில் இன்று(அக்டோபர் 15) திறந்து வைத்தார்.

பிள்ளைகளின் ஆரம்ப குழந்தைப் பருவத்தில் அவர்களது மேம்பாட்டில் பெற்றோருக்கு ஆதரவு அளிக்கும் ஒரு முயற்சியாக இத்திட்டம் அமையும்.

கிட்ஸ்டார்ட் சிங்கப்பூர், எஸ்பி குரூப், ஈட்டன் ஹவுஸ் சமூக நிதி ஆகிய அமைப்புகளின் கூட்டு முயற்சியில் இந்த குட்டி நூலகங்கள் உருவாகின.