இணையத் தாக்குதல்கள் சிங்கப்பூரின் நீர் விநியோகத்தைப் பாதித்து, மின்தடையை ஏற்படுத்தக்கூடும். இத்தகைய சூழலைத் தடுக்க, கடந்த இரண்டு நாட்களாக நூற்றுக்கும் மேற்பட்டோர் பாவனைப் பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.
செவ்வாய், புதன்கிழமைகளில், சிங்டெல், எஸ்எம்ஆர்டி, செம்ப்கார்ப், எஸ்டி இன்ஜினியரிங் போன்ற 16 நிறுவனங்களின் 55 பணியாளர்கள் இதில் கலந்துகொண்டனர்.
சிங்கப்பூர் ஆயுதப் படையின் மின்னிலக்க, புலனாய்வுச் சேவையின் முதல் இணையப் பாதுகாப்பு பயிற்சியில் நீர் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் மீதான பாவனைத் தாக்குதலை அடையாளம் கண்டு அவற்றைத் தீர்க்க இவர்கள் முயன்றனர்.

