வீட்டுப்பணிப்பெண்ணை பலமுறை துன்புறுத்திய மாதுக்கு நேற்று பத்து மாத சிறை தண்டனையும் $1,000 அபராதமும் விதிக்கப்பட்டது. பணிப்பெண்ணுக்கு மூச்சுத் திணறும் வரை மாது கழுத்தை அழுத்தினார்.
பாதிக்கப்பட்டவருக்கு $5,076 இழப்பீடு வழங்கவும் அந்த 43 வயது மாதுக்கு உத்தரவிடப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்ட மாதுக்கு நவம்பர் 10ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவர் நீதிமன்றத்தில் நிலைகுலைந்ததால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நேற்றைய விசாரணையில் அவர் நிதானமாகத் தோன்றினார்.
அந்த மாது மீது ஆறு தாக்குதல் குற்றச்சாட்டுகள், குற்றவியல் தாக்குதல் குற்றசாட்டு சுமத்தப்பட்டன. 2017 ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் அந்த மாது குற்றங்களைச் செய்துள்ளார்.
மாது, பணிப்பெண் பற்றிய விவ ரங்களை வெளியிட நீதிமன்றம் தடை விதித்தது.

