கழுத்தை அறுத்துக்கொண்டு நாடகமாடிய பணிப்பெண்

கழுத்தை அறுத்துக்கொண்டு நாடகமாடிய பணிப்பெண்

1 mins read
c26c60ef-f904-4602-a0cd-f3ac206dbfea
-

முத­லா­ளி­யி­ட­மும் உடன் வேலை­பார்த்த பணிப்­பெண்­ணி­ட­மும் பணம் திரு­டிய 45 வயது இல்­லப் பணிப்­பெண்­ணான கொன்ஸாலஸ் அமோர் கோய் (படம்), திரு­டர்­கள் கதவை உடைத்­து­வந்து தன்­னைத் தாக்­கி­ய­து­போன்ற தோற்­றத்தை உரு­வாக்­கத் தனது கழுத்­தி­லும் முது­கி­லும் கத்­தி­ரிக்­கோ­லால் காயங்­களை ஏற்­ப­டுத்­திக்­கொண்­டார்.

பிலிப்­பீன்­சைச் சேர்ந்த இவ­ரின் குட்டு, காவல்­து­றை­யின் மோப்ப நாய் மூலம் வெளிப்­பட்­டது. வீட்­டில் திரு­டி­யது, காவல்­து­றை­யி­டம் தவ­றான தக­வல் தந்­தது ஆகிய குற்­றங்­களை ஒப்­புக்­கொண்­ட­தை­ அடுத்து இவ­ருக்கு பத்து மாதச் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது. தண்­டனை விதிக்­கும்­போது மற்­றொரு திருட்­டுக் குற்­ற­மும் கருத்­தில் கொள்­ளப்­பட்­டது. இவ்­வாண்டு அக்­டோ­பர் மாதம் 10ஆம் தேதி அதி­கா­லை­யில் நாட­க­மாடி இவர் திரு­டிய நகை­க­ளின் மொத்த மதிப்பு $11,000 எனக் கூறப்பட்டது.