தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஏப்ரலில் வெவ்வேறு வேலையிடச் சம்பவங்களில் ஊழியர்கள் இருவர் மரணம்

3 mins read
94480c79-f6e4-4092-8737-126ecab55900
-

ஏப்­ரல் மாதத்­தில் பத்து நாள் இடை­வெ­ளி­யில் வெவ்­வேறு வேலை­யி­டச் சம்­ப­வங்­களில் ஊழி­யர்­கள் இரு­வர் மர­ண­ம­டைந்­த­னர்.

ஒரு­வர் புதி­தாக அமைக்­கப்­பட்­டி­ருந்த மின்­தூக்கி சுரங்­க­வா­யிற்­குழி வேலை­யில் ஈடு­பட்­டி­ருந்­த­போது அதில் விழுந்து மாண்­டார். மற்­றொ­ரு­வர் ஃபோர்க்­லி­ஃப்ட் பாரந்­தூக்கி சாத­னம் தன்­மீது விழுந்­த­தால் மாண்­டார்.

இவ்­வாண்­டில் இது­வரை 11 வேலை­யிட மர­ணங்­கள் நிகழ்ந்­துள்­ளன. இது பற்றி புதன்­கி­ழமை வெளி­யி­டப்­பட்ட வேலை­யி­டப் பாது­காப்பு, சுகா­தார மன்­றத்­தின் விழிப்­பு­நிலை அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

ஏப்­ரல் 18ஆம் தேதி­யன்று, புதி­தாக அமைக்­கப்­பட்­டி­ருந்த மின்­தூக்கி சுரங்­க­வா­யிற்­குழி வேலை­யில் ஈடு­பட்­டி­ருந்­த­போது ஆறு மீட்­டர் ஆழ­மான அந்­தக் குழி­யில் ஊழியர் ஒருவர் விழுந்தார். மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்ட அவர் காயங்­கள் கார­ண­மாக பின்­னர் அங்கு மாண்­டார்.

மின்­தூக்கி சுரங்­க­வா­யிற்­கு­ழி­யைச் சுற்றி தடுப்­புக் கம்­பி­கள் போடப்­பட்­டி­ருந்­தா­லும் விபத்து நேர்ந்­த­போது அந்த ஊழி­யர் குழி­யில் விழு­வ­தைத் தடுக்­கும் பாது­காப்­புச் சாத­னங்­களை அணிந்­தி­ருக்­க­வில்லை என்று ஆரம்­பகட்ட விசா­ர­ணை­யில் தெரிய வந்­தது.

"மின்­தூக்கி சுரங்­க­வா­யிற்­குழிக்கு அரு­கிலோ குழி­யி­னுள்ளோ வேலை செய்­யும் ஊழி­யர்­கள் குழிக்­குள் விழும் அபா­யத்தை எதிர்­நோக்­கு­கி­றார்­கள்," என்று மன்­றத்­தின் அறிக்கை கூறு­கிறது.

வாக­னப் பழு­து­பார்ப்பு வேலை­யில் ஈடு­பட்­டி­ருக்­கும் நிறு­வ­னங்­கள், அவர்­க­ளின் ஊழி­யர்­களுக்­குப் போது­மான பாது­காப்பு அளிக்­கப்­பட்­டுள்­ள­தா என்­பதை மதிப்­பீடு செய்ய வேண்­டும் என்­றும் மன்­றம் வலி­யு­றுத்­தி­யது.

தங்­க­ளது வேலை­யி­டப் பாது­காப்பு, சுகா­தார மன்­றத்­தின் மேலாண்மை முறையைக் கொண்டு மதிப்­பீடு செய்து, அதில் போது­மான அள­வில் பாது­காப்பு நட­வ­டிக்­கை­கள் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளதை உறு­திப்­ப­டுத்த வேண்­டும் என்­றும் விழிப்­பு­நிலை அறிக்கை தெரி­விக்­கிறது.

உதா­ர­ணத்­துக்கு, உய­ரத்­தில்­இருந்து வேலை செய்­வ­தற்­கு­ரிய பாது­காப்­புப் பயிற்சி எடுத்­துக்­கொண்­டாரை மட்­டுமே மின்­தூக்கி சுரங்­க­வா­யிற்­கு­ழிக்­குப் பக்­கத்­திலோ அல்­லது குழிக்­குள்­ளேயோ வேலை செய்ய அனு­மதிக்க வேண்­டும்.

குழி­யைச் சுற்றி போடப்­பட்­டுள்ள பாது­காப்­புத் தடுப்­பில் ஏறியோ அல்­லது தடுப்­புக்­குள் புகுந்தோ செல்­லக்­கூ­டாது என்று நிறு­வ­னங்­கள் தங்­கள் ஊழி­யர்­களுக்­குக் கடு­மை­யான கட்­டளை பிறப்பிக்க வேண்­டும்.

ஏப்­ரல் 28ஆம் தேதி நிகழ்ந்த மற்­றொரு சம்­ப­வத்­தில், ஃபோர்க்­லி­ஃப்ட் பாரந்­தூக்கி சாத­னம் தன்­மீது விழுந்­த­தால் தொழில்­நுட்­பர் ஒரு­வர் மாண்­டார். அவர் அந்­தச் சாத­னத்­தில் பழு­து­பார்ப்பு வேலை­யில் ஈடு­பட்­டுக்­கொண்­டி­ருந்­தார். அந்த விபத்­தில் ஊழி­யர் சம்­பவ இடத்­தி­லேயே மாண்­டார்.

"வாக­னப் பழு­து­பார்ப்பு வேலை­களில் ஈடு­ப­டு­வோர், வாகன உதிரி பாகங்­கள் தொடர்­பா­கவோ, இயந்­திர பாகங்­கள் தொடர்­பா­கவோ பணி­யாற்­றும் தரு­ணத்­தில் ஆபத்­து­களில் சிக்­கிக்­கொள்ள அதிக வாய்ப்­புள்­ளது," என்­றும் மன்­றத்­தின் அறிக்கை கூறு­கிறது.

தங்­கள் வேலை தொடர்­பான ஆபத்­து­கள் பற்­றி­யும் அதைத் தவிர்க்க அவர்­கள் கடைப்­பி­டிக்க வேண்­டிய பாது­காப்பு நடை­மு­றை­கள் பற்­றி­யும் ஊழி­யர்­கள் அறிந்­தி­ருப்­பதை நிறு­வ­னங்­கள் உறுதி செய்ய வேண்­டும்.

இச்­சம்­ப­வங்­கள் குறித்து மனி­த­வள அமைச்சு விசா­ரணை மேற்­கொண்­டுள்­ளது. வேலை­யிடப் பாது­காப்பு, சுகா­தார மன்­றச் சட்­டத்­தின்­படி முதல் முறை குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்ட நிறு­வ­னத்­துக்கு $500,000 வரை அப­ரா­தம், தனி­ந­பர்­க­ளுக்கு $200,000 வரை அப­ரா­தம் அல்­லது ஈராண்டு வரை சிறை அல்­லது இரண்­டும் தண்­ட­னை­யாக விதிக்­கப்­ப­ட­லாம்.

இங்­குள்ள நிறு­வ­னங்­க­ளுக்கு உயர்த்­தப்­பட்ட பாது­காப்பு அவ­கா­சம் தரபட்டுள்ளது. 2022 செப்­டம்­பர் 1ஆம் தேதி தொடங்­கிய அது பிப்­ர­வரி 28ஆம் தேதி முடி­வடை­யும் என்று முன்­ன­தாக அறி­விக்­கப்­பட்­டது. ஆனால், அது மே 31ஆம் தேதி வரை நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­தக் கால அவ­கா­சத்­துக்­குள் கடு­மை­யான வேலை­யி­டப் பாது­காப்­பு, சுகாதார குறை­பா­டு­கள் இழைக்­கும் நிறு­வ­னங்­க­ளுக்கு எதி­ராக மனிதவள அமைச்சு புதிய வொர்க் பெர்­மிட் ஊழி­யர்­களை வேலைக்கு அமர்த்த தடை போன்ற கடு­மை­யான நட­வ­டிக்­கை­களை எடுக்கும்.